உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 31 Second

தங்களுடைய குழந்தையின் எதிர்காலம் வளமாக அமைய, அவர்கள் கல்வியில் சிறந்துவிளங்க வேண்டும். நம்பர் ஒன் மாணவனாக / மாணவியாக உருவாக வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்குமே இருக்கும் நியாயமான ஆசைதான். பள்ளியில் முன்னணியில் இருக்கும் மாணவர்களைப் பார்த்தால் அவர்களைப் போல தங்கள் குழந்தை இல்லையே என்று ஏக்கம் கொள்வதும் நடப்பதுதான்.

ஊடகங்களில் அவ்வப்போது ஐ.க்யூ அதிகம் கொண்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் வெளியாகும்போது அவர்களுக்கு மட்டும் எப்படி அதீத அறிவுத்திறன் சாத்தியமானது என்ற கேள்வியும் எழும். பெரும்பாலான பெற்றோரின் ஏக்கம் தீர்க்கும் வகையில், எல்லா குழந்தையுமே அறிவுத்திறனில் மேம்பட முடியுமா? உளவியல் மற்றும் அறிவியல் ரீதியாக அதற்கு என்ன சாத்தியங்கள் இருக்கிறது?
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் பேசினோம்….

‘‘மனிதர்களில் அறிவாளி, அறிவிலி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புத்திசாலிகளே! எந்த நேரத்தில் எப்படி சிந்தித்தால் வெற்றி கிட்டும் என சரியாக சிந்திக்கும் திறனை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்குமே ஒவ்வொரு திறன் நிச்சயம் இருக்கும். பொதுவாக அறிவுத்திறனை அளவிடும் சோதனையான Intelligence quotient முறையே பல விதங்களில் சோதித்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

வாய்மொழி மற்றும் மொழியியல்(Verbal & Linguistic), கணிதம் மற்றும் தர்க்கவியல்(Maths & Logical), முகபாவனை(Facial), இசை(Musical) சமூகத் தொடர்புத்திறன் (Interpersonal skill), தன்னைத்தானே கையாளும் திறன்(Intrapersonal skill), உடல்திறன் மற்றும் உடல் நடவடிக்கைகள் (Physical & Physical Activities) மற்றும் இயற்கையுடனான தொடர்பு என Intelligence quotient
பரிசோதனையில் பலவிதங்கள் இருக்கின்றன.

மேற்சொன்ன இத்தனை பன்முகத் திறமைகளையும் வைத்துதான் ஒருவருடைய IQ நிலையை கணிக்க வேண்டும் என்று ஹாவர்டு கார்னர் என்ற ஆராய்ச்சியாளர் சொல்லியிருக்கிறார். சராசரியாக ஒரு மனிதனுக்கு 90 முதல் 110 வரை ஐ.க்யூ இருக்கும்’’ என்றவரிடம் இந்த IQ எப்படி வருகிறது என்று கேட்டோம்.‘‘மரபணுவழியாக இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு IQ அதிகமாக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு புறத்தூண்டுதல் மூலம் IQ லெவல் அதிகமாக இருக்கும். பிறக்கும்போது IQ லெவல் அதிகமாக உள்ள ஒரு குழந்தையிடம், பெற்றோர்கள் சரியாக பேசாமல், கவனிக்காமல் விட்டுவிட்டால் அக்குழந்தையின் அறிவுத்திறன் வெளிவராமலேயே போய்விடும். அதேசமயம், இயற்கையில் IQ குறைவாக உள்ள குழந்தையின் பெற்றோர் அக்குழந்தையை திறமையாக கையாளும்போது, அதன் அறிவை மேம்படுத்தி திறமைசாலியாக்க முடியும்.குழந்தை பிறந்ததிலிருந்து அவர்களிடம் அதிகமாக பேச்சு கொடுப்பது, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது, கதைகள் சொல்வது, கதைகளை அவர்களாகவே படிக்க வைப்பது என பெற்றோர் தாங்கள் நேரடியாக குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் சி.டியை போட்டு பார்க்கச் சொல்கிறார்கள். இந்தக் கற்பிக்கும் முறை தவறு, ஒரு பாட்டையோ, கதையையோ நேரடியாகச் சொல்லும்போது சொல்பவர்களின் உதட்டசைவு மற்றும் அங்க அசைவுகள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து குழந்தை கற்றுக்கொள்ளும்.

அதேபோல பேச்சுத்திறன் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு புரிந்துகொள்ளும் திறனும் முக்கியம். ஒரு பொருளைப் பற்றி சொன்னால் மட்டும் போதாது. அந்தப் பொருளை நேரில் காட்டியும் விளக்க வேண்டும். கண்ணால் பார்த்து, கையால் தொட்டு, காதால் கேட்டு, புரிந்து கொண்டால் மட்டுமே அந்த பொருளைப்பற்றிய அனைத்து தகவலும் குழந்தையின் மனதில் பதியும். வெளியுலகைப்பற்றிய தகவல்களையும் குழந்தையிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த முறையில்தான் மாண்டிசோரி பள்ளி
களில் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறார்கள். வெறுமனே மனப்பாடம் செய்வது மட்டும் கல்வி கிடையாது. குழந்தையிடம் உள்ள அறிவுத்திறனை வெளிக்கொண்டு வருவதே கல்வி. குழந்தை பிறந்தது முதல் அதன் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் அவர்களின் அறிவுத்திறன் வளரும். பிரபலமான பள்ளிகளில் சேர்ப்பதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டு, இவர்கள் பாட்டுக்கு செல்போனிலோ, லேப்டாப்பிலோ, டிவியிலோ மூழ்கி இருந்தால் கண்டிப்பாக குழந்தையின் அறிவுத்திறன் நிச்சயம் வளராது. தங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் தாங்கள் முதலில் தெரிந்து கொண்டு பிறகு குழந்தைகளுக்கு கற்றுத்தருவதில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்.

ஒரு குழந்தையோடு சேர்ந்து தாங்களும் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். டானிக்கோ, ஆரோக்கிய பானமோ அறிவை வளர்க்காது. சரிவிகிதமான உணவு, 8 மணிநேர தூக்கம், உடற்பயிற்சி, அறிவுத்திறனை தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் போன்றவைதான் குழந்தையின் மூளையைத் தூண்டும். உணவை நன்றாக மென்று உண்பதுகூட அறிவைத் தூண்டும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். மொழி, புரிய வைப்பது, கையால் தொட்டு உணர்ந்து கொள்வது, எதையும் எடுத்துக்காட்டுடன் உணர்த்துவது, வெளிஉலகத் தொடர்பு, எதையும் அவர்களே உணர்ந்து கொள்வது, கேள்விகேட்க கற்றுக் கொடுத்தல் மற்றும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல் ஒவ்வொன்றையும் புரிந்து படிப்பது இவையெல்லாம்தான் ஒரு குழந்தை அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய செயல்கள்!’’

படித்தவற்றை நினைவில்
நிறுத்திக் கொள்ள…

பாடங்களை முதலில் மேலோட்டமாக படிக்க வேண்டும். 2-வதுமுறை புரிந்து படிக்க வேண்டும். 3-வது முறை முக்கியமானவற்றை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். 4-வது முறை படிக்கும்போது பக்கத்தில் குறிப்பு எழுதிவைத்துக் கொள்வது நல்லது. 5-வதாக மற்றும் இறுதியாக அதாவது தேர்வுக்கு செல்வதற்கு முன் அடிக்கோடிட்டு வைத்தவற்றையும், குறிப்புகளையும் பார்தாலே போதுமானது.இதில் இன்னொரு வழியும் உண்டு. பாடங்களை வேறு ஏதாவது நிகழ்வுகளோடோ மற்ற பொருட்களோடோ செயல்களுடனோ கற்பனையாகத் தொடர்புபடுத்தி படிப்பது நல்ல டெக்னிக். தேர்வுக்கு முதல்நாள் இரவில் தூக்கத்தைக் கெடுத்து கண்விழித்து படிப்பது, கடைசி நிமிடத்தில் படித்துவிட்டு தேர்வை நன்றாக எழுத முடியும் என்ற நம்பிக்கை கொள்வது போன்ற வீணான செயல்களால் எந்த பயனும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளைக் கெடுக்கும் டெக்னாலஜி வில்லன்!! (மருத்துவம்)
Next post தனிமையை உணரும் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்! (கட்டுரை)