கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 31 Second

*கொத்தமல்லி கட்டை வேரோடு ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் மூழ்கியிருக்கும்படி ஃபிரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.

*எலுமிச்சை ஊறுகாய் துண்டுகள் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பேஸ்டில் கேரட்டை துண்டுகளாக்கிப் போட்டு ஊற வையுங்கள். பிறகு சாப்பிடுங்கள். ருசியாக இருக்கும்.

*வெண்டைக்காய் பொரியல் செய்யும்பொழுது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்குங்கள். சுவையாக இருக்கும்.

– இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

*உலர் திராட்சை பாக்கெட் வாங்கியதும் அதனை ஒரு தட்டில் கொட்டி சிறிதளவு அரிசி மாவினைத் தூவிக் கலந்து பிறகு பாட்டிலில் வைத்தால் திராட்சை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும். தேவையான அளவு சமையலுக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

*தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகள் சிலசமயம் நமது ஈரக்கை பட்டு நமத்துவிடும். இதனைத் தவிர்க்க தீப்பெட்டியில் சிறிதளவு சாக்பீஸ் துண்டைப் போட்டு வைக்கலாம்.

– எஸ். நிரஞ்சனி, முகலிவாக்கம்

*வெட்டிய வெங்காயத்தைத் திறந்து வைக்கக் கூடாது. அதற்கு கிருமிகளை ஈர்க்கும் சக்தி உள்ளது. அதனால் பயன்படுத்தும் போது மட்டுமே தோலை நீக்கி வெட்டவும்.

*ரசம் தாளிக்கும்போது, தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையை போடாமல், தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாக இருக்கும்.

– ஆர்.ஹேமமாலினி, திருச்சி.

*தோசை சுடும்போது தோசை கருகாமல் இருக்க ஒவ்வொரு தோசை ஊற்றுவதற்கு முன்பு தண்ணீரைத் தெளித்து துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை கருகாது.

*வெஜிடபிள் ரைஸ், தக்காளி ரைஸ் செய்யும்போது, தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால், மாறுதல் ருசியுடன் மிகவும் நன்றாக இருக்கும்.

*தேன்குழல் செய்ய மாவு பிசையும்போது, உருளைக்கிழங்கை வேக வைத்து அதனுடன் சேர்த்து பிசைந்தால் தேன்குழல் மிக மிகச் சுவையாக இருக்கும்.

– எஸ்.சுமதி, கரூர்.

*வாழைப்பழம் விரைவில் கறுத்து விடாமல் இருக்க, ஈரத்துணியில் சுற்றி வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*ஃபிரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மென்டில் வைக்கக் கூடாது. ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒருவித வாயு கேரட்டை கசக்கச் செய்துவிடும்.

– அ.சித்ரா, காஞ்சிபுரம்.

*கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து, நன்கு உலர்த்தி பின்பு மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி தயார்.

*முட்டைகோஸை துருவி, நன்றாக வதக்கி, அத்துடன் தேவையான அளவு மிளகாய் வற்றல், உப்பு, புளி சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.

*வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து, சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

– எஸ்.ஜெயந்திபாய், மதுரை.

*தேங்காய்ப்பூவை துருவியதும், மைக்ரோவேவ் அவனில் லேசாக சூடுபண்ணி, காற்று புகாத டப்பாவில் போட்டு, சில்டிேரயில் வைத்தால், உபயோகிக்க எடுக்கும்போது, கட்டியாகாமல், பொலபொலவென்று இருக்கும்.

*சுண்டைக்காய் வற்றல் கசக்கிறதா? மோரில் உப்பு போட்டு, சுண்டை வற்றலைப் போட்டு மூன்று தினங்கள் ஊற வைத்து பின் வெளியே எடுத்துக் காய வைத்து, உபயோகித்தால் கசப்பு தெரியாது.

– என்.கோமதி, நெல்லை.

*நெல்லிக்காயை சீவிப்போட்டு பருப்புத்தண்ணீரோடு ரசம் செய்தால் சுவையாக இருக்கும். எந்த நெல்லியையும் பயன்படுத்தலாம்.

– எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

*ரசப்பொடி இல்லையா! டோன்ட் வொர்ரி, சாம்பார் பொடியுடன் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் பொடி செய்து சேர்த்து ரசம் வைத்தால் மணமோ மணம் வீசும்.

*பாகற்காய் பொரியல் செய்யும்போது, முளைக்கீரை அல்லது அரைக்கீரையை பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கினால் கசக்காது. சுவை கூடும்.

– அ.யாழினி பர்வதம், சென்னை.

*தேன்குழல், சீடை போன்றவற்றின் மாவோடு வெந்நீர் ஊற்றிப் பிசைந்து செய்தால், நீண்ட நாட்கள் கெடாது.

*சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, இறக்கும்போது, 1/2 கப் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி இறக்கினால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

*துவரம்பருப்பை வேக வைக்கும்போது பொங்கி வந்தால், அத்துடன் 2 சொட்டு கடலை எண்ணெயை விட்டால் பொங்காது.

– ஆர். கீதா ரவி, சென்னை.

ராகி நூடுல்ஸ்!

வாரம் ஒருமுறை ராகியை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் ராகி தோசை, ராகி புட்டு, ராகி உப்புமா போன்றவை செய்யலாம். ருசியான ராகி நூடுல்ஸ் எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை

ராகி நூடுல்ஸ் – 2 கப்
வெங்காயம் – 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
குடை மிளகாய் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
முட்டைகோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
நெய் – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை

முதலில் ராகி நூடுல்ஸை சிறிது உப்பு நீர் தௌித்து பிசறி ஆவியில் வேக வைத்து எடுத்து, பிறகு உதிர்த்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், குடை மிளகாய், முட்டைகோஸ், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் வெங்காயத்தாள், இஞ்சி – பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு வேகவைத்து எடுத்த ராகி நூடுல்ஸையும் அதோடு சேர்த்து கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ராகி நூடுல்ஸ் தயார்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கும் பாலியேட்டிவ் கேர்!! (மருத்துவம்)
Next post ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு! (மகளிர் பக்கம்)