குழந்தைகளுக்கும் பாலியேட்டிவ் கேர்!! (மருத்துவம்)
குழந்தைகளுக்கும் பெரியளவில் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை தேவைப்படுகிறது. மஸ்குலர் டிஸ்ட்ராபி எனப்படுகிற பிரச்னை குழந்தை
களைத் தாக்கும். அவர்களது உடல் தசைகளே செயல்படாமல் போகும் அளவுக்கு சுரப்பிக் குறைபாடுதான் காரணம். இது மரபுரீதியான ஒரு பிரச்னை. மஸ்குலர் டிஸ்ட்ராபி, நரம்பியல் கோளாறுகள், விபத்துக்குள்ளானவர்கள், மூளைக் காய்ச்சல் வந்து பாதிக்கப்பட்டவர்கள் என குழந்தைகள் பல பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய் தாக்கி அவதிக்குள்ளாகும் குழந்தைகளுக்கும் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை பெரிதும் தேவைப்படும்.
முன்பெல்லாம் குழந்தைகளைத் தாக்கும் Juvenile டயாபட்டீஸ் கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இப்போது அதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜுவைனல் டயாபட்டீஸ் என்பது குழந்தைகளைத் தாக்கும் சர்க்கரை நோய். அதன் விளைவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகக் குறையும். அடிக்கடி தொற்று நோய்கள் தாக்கும். சர்க்கரை நோய் வந்த பெரியவர்களைவிடவும் குழந்தைகளை மிகமிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.
முதலில் குழந்தைகளுக்கு அவர்களது நோய் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். சர்க்கரை நோய் தீவிரமாகாமல் இருப்பதற்கான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கான சிறப்பு மருத்துவர்களைப் பார்த்து முறையான சிகிச்சை பெற வேண்டும். கன்னாபின்னாவென மாத்திரைகள் கொடுத்தால் குழந்தைகளின் சிறுநீரகங்கள் கெட்டுப் போக வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கான பாலியேட்டிவ் கேர் என்பது பெரியவர்களுக்கான பாலியேட்டிவ் கேரில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளின் அளவு மாறுபடும். குழந்தைகளின் வயது, அவர்களது தசை மற்றும் நரம்பு செயல்பாட்டின் தன்மை போன்றவை தெரிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பூ மாதிரி மென்மையானவர்கள் குழந்தைகள். வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் மிக எளிதில் அவர்களைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகளுக்கான பாலியேட்டிவ் கேர் சமீப காலமாகத்தான் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. இவர்களுக்கான மருத்துவ நிபுணர் குழுவில் குழந்தை மருத்துவர், பாலியேட்டிவ் கேர் மருத்துவர், தெரபிஸ்ட் என எல்லோரும் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் அவர்களது பெற்றோருக்கும் கவுன்சலிங் பெரியளவில் தேவைப்படும்.
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு பாலியேட்டிவ் கேர் மிகப் பெரிய வரப்பிரசாதம். கட்டியுள்ள குழந்தைகள் இருப்பார்கள். இதை Ewing sarcoma என்கிறோம். இது பிறவியிலோ அல்லது குழந்தையின் வளரும் காலத்திலோ கட்டி மாதிரித் தோன்றி, அது நரம்பும் சதையும் சேர்ந்து பெரிதாகலாம். இதை அறுவை சிகிச்சை மூலமாக எடுத்துவிடலாம். சிலதை அறுவை சிகிச்சையாலும் நீக்க முடியாது. இந்த நிலையில் பாலியேட்டிவ் கேர்தான் அவர்களுக்கு ஒரே ஆறுதல். கட்டி இருப்பதால் ரத்த ஓட்ட செயல்பாடு பாதிக்கும்.
வலி அதிகமாக இருக்கும். லுகிமியா எனப்படுகிற புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பது, பிளேட்லெட் குறைவது, புற்றுநோய் செல்கள் உற்பத்தியாவது, ரெட்டினோபிளாஸ்ட்டோமா எனப்படுகிற கண் புற்றுநோய், அதன் விளைவாக மூளை பாதிப்பு என குழந்தைகளின் அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல.
பெரியவர்கள் என்றால் வலியைச் சொல்லத் தெரியும். சகித்துக்கொள்ளவும் தெரியும். குழந்தைகள் என்ன செய்வார்கள்? உயிரைக் காப்பாற்ற முடியாது எனச் சொன்னாலும் பெற்றோரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளின் புற்றுநோய் நிலைகளைப் பொறுத்து சிகிச்சையும் வேறுபடும். அவர்களுக்கும் பெற்றோருக்கும் கவுன்சலிங் அவசியம்.
Average Rating