சதாம்உசேனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு தேதி 5-ந்தேதி அறிவிக்கப்படும்

Read Time:2 Minute, 0 Second

Irak.saddam.jpgஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் தன் ஆட்சிக்காலத்தில் ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது. எந்தத்தேதியில் தீர்ப்பு கூறப்படும் என்பது நேற்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது.

நேற்று கோர்ட்டு கூடியது. ஆனால் என்று தீர்ப்பு கூறப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. தீர்ப்பு கூறுவதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறிவிட்டார்.வருகிற நவம்பர் 5-ந்தேதி மீண்டும் கூடும். அப்போது தீர்ப்பு என்று கூறப்படும் என்பது அறிவிக்கப்படும் என்று தெரியலாம் என்று கோர்ட்டு அதிகாரி ரீடு ஜ×கி கூறினார்.

இந்த வழக்கில் சதாம்உசேன் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்மானிக்குமானால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கவக்கீல் வலியுறுத்தினார். மரணதண்டனை விதிக்கப்பட்டால் ஈராக் நாட்டுச்சட்டப்படி அவர் தூக்கிலிடப்படுவார்.

மரணதண்டனை என்று முடிவானால் நான் சுட்டுக்கொல்லப்படுவதையே விரும்புகிறேன் என்று சதாம்உசேன் கூறினார். இருந்தாலும் சதாம் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதால் மரணதண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட மாட்டாது என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப் புலிகள் வானொலி மீது குண்டு வீச்சு!
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்