குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்? (மருத்துவம்)

Read Time:3 Minute, 39 Second

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன எனச் சொல்ல தெரியும். அதற்கான பயிற்சியை எப்போது தொடங்குவது? எப்படித் தொடங்குவது? என்று பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம். குழந்தைகள் 14 – 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.

எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்?

* கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.

* ஒருவேளை ஆடையில் சிறுநீர் மலம் கழித்துவிட்டால்கூட எப்படி பக்குவமாக கழற்றுவது என சொல்லி தர வேண்டும்.

* அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.

* குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.

* குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.

* தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.

* சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.

* இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.

* குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 சதவிகிதம் கூட நல்ல பலன் தரும்! (மகளிர் பக்கம்)
Next post 6 மாதம் முதல் 2 வயது வரை….!! (மருத்துவம்)