வாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 28 Second

அற்பமான விஷயங்களையும், தேவைப்படாத விஷயங்களையும் கைவிடுதல்…அடிப்படை விதிகளை ஏற்படுத்தி ஒருவர் மற்றவர் கோணத்திலிருந்து பார்த்து பிரச்னையை அடையாளம் கண்டு விட்டீர்கள். இப்போது இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஏற்படுத்த வேண்டும். நீங்களோ உங்கள் துணைவரோ ஒற்றுமையாக இல்லாவிட்டால் தீர்வு காணமுடியாது அல்லவா? இந்த நிலையில் மீண்டும் நெருக்கமான நிலைக்குச் செல்லும் வழியை கண்டறிந்து, அதில் கவனம் செலுத்தி ஒருவரை ஒருவர் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.துணைவரின் ‘கொடுப்பவர் நிலையில் இருந்து பார்ப்பது சுலபம்’… உங்கள் துணைவரைப் புரிந்து கொள்வதற்கான ரகசியம் என்னவென்றால், உங்கள் துணைவருக்குள் இருக்கும் பெறுபவர் நிலையிலிருந்து நீங்கள் பிரச்னையை அணுக வேண்டும்.

‘அவள் என்னை உண்மையாக நேசித்தால், எனக்காக அவள் இதை செய்யட்டும் அல்லது அதை ஒப்புக் கொள்ள அவருக்கு மனமிருந்தால் ஒப்புக் கொள்ளட்டும்…’ – இப்படி துணைவரின் பெறுபவரின் சுயநல குணத்துடன் பிரச்னையைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அதே வேளையில் அதை உங்கள் சுயநல குணத்தோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். அப்போது தான் சமாதான வழி கிடைக்கும்.

நீங்கள் மனக்குமுறலோடு இருக்கும்போது, தரத்தை விட அளவுதான் முக்கியமாகத் தெரியும். உங்கள் மனதை அதன் போக்கில் அலைய விடுங்கள். உங்கள் இருவரின் பெறுபவரும் திருப்தியடையும் வகையில் அது எதைப் பற்றி வேண்டுமானாலும் சிந்திக்கட்டும். பிரச்னையைத் தீர்க்கும் வழியில் மனதை செலுத்தினால் தீர்வு உடனடியாகக் கிடைக்கும்.சில பிரச்னைகளை அணுகுவதற்கு பல நாட்கள் கூட தேவைப்படலாம்.

அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்பதால், பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வும் காண உங்களுக்கு என்னென்ன வழிகள் தோன்றுகின்றன என்பதையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய ஒரே இலக்கு, இருவருக்குள்ளும் இருக்கிற பெறுபவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்வு அமைவதுதான். கொடுப்பவர் தரும் தீர்வை பெறுபவர் தடுத்து பின்வரும் ஆலோசனை கூறுங்கள்… ‘அடுத்த முறை என் விருப்பத்துக்கு என்னை விட்டால், இந்த முறை நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய்ய அனுமதிப்பேன்’.

உதாரணத்துக்கு… உங்கள் நண்பர்களோடு வெளியே செல்ல விரும்புகிறீர்கள். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. துணைவரிடம் ‘நான் வெளியே போக வேண்டியுள்ளதால் குழந்தைகளை இன்று பார்த்துக் கொள், நாளை நீ வெளியே செல்லும் போது நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்வீர்கள். இப்படி ஓர் உடன்படிக்கைக்கு வருவோம். இந்த இடத்தில் தம்பதியர் ஒவ்வொருவரும் மற்றவர் தியாகம் செய்யும்போது மற்றவர் வேடிக்கை காட்டலாம் என நினைப்பார்கள்.

ஒருவர் மகிழ்ச்சியடையும்போது இன்னொருவர் மகிழ்ச்சியடையாத நிலையை ஏற்படுத்துவது உடன்படிக்கையாக ஒப்புக் கொள்ளப்பட்டு பழக்கமாகி விட்டால், இல்லற வாழ்வு தொல்லையான வாழ்வாக இருக்கும்.கொடுப்பவரும் பெறுபவரும் பிரச்னைகளைப் பற்றி புரிந்து கொள்ளாததால் இருவருக்கும் வெற்றியான ஒரு தீர்வைத் தராமல், வெற்றி-தோல்வி என்ற தீர்வைத்தான் தருகிறார்கள். இரண்டு பேருமே சேர்ந்து துக்கப்படுவதுதான் சந்தோஷமான விஷயம் என அவர்கள் நினைக்கிறார்கள். இப்படியின்றி, இருவருமே பாதிக்காத வகையில் தீர்வு இருந்தால்தானே இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

வழிமுறை-4

பரஸ்பரம் இருவரும் ஏற்கும் வகையில் உற்சாகமான உடன்படிக்கை செய்தல்…பலவித குழப்பங்களுக்கு பிறகு சில தீர்மானங்களுக்கு வருவீர்கள். அவை நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், என்ன தீர்மானித்தீர்களோ அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். இதில் நல்ல தீர்மானம் என்பது கூட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் இருவருக்கும் நன்மை தருபவையாக, அடுத்தவர் நலன் காப்பவையாக, இருவராலும் விரும்பத்தக்கதாக இருக்கும். கெட்ட தீர்மானமானது ஒருவரின் இழப்பில் அடுத்தவர் லாபம் அடையும் வகையில் தன் உணர்வுகளை மட்டுமே கவனத்தில் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொருவரும் அடுத்தவரின் உணர்வுகளை கவனத்தில் கொண்டு நடக்கும்போது பல பிரச்னைகள் தாமாகவே தீர்ந்து விடும். இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு இருவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும் வரை பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவதை நிறுத்தி வைத்தாலே பல பிரச்னைகள் தாமாக சரியாகி விடும்.உங்கள் துணைவரின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது அல்லது அதில் அவருக்குப் போதிய அனுபவம் இல்லை எனக் கருதும்போது, வேறுவழியில் உங்களுக்குத் தெரிந்த மாதிரியான தீர்வின் மூலம் அவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதற்கேற்ற மென்மையான முடிவுகளை மேற்கொள்ள தீர்மானம் செய்வீர்கள்.

உதாரணத்துக்கு… உங்கள் துணைவர், ‘நான் வேலையிலிருந்து நேராக நண்பர்களை சந்திக்கச் செல்கிறேன், தாமதமாகத்தான் வருவேன், அதுவரை குழந்தைகளை கவனித்துக் கொள்’ என உங்களிடம் சொல்கிறார். வழக்கமாக இப்படித்தான் தாமதமாக வருவார் அல்லது தாமதமாக வருவதற்கான காரணத்தை உங்களிடம் சொல்லாமலே இருக்கிறார் என்றால், அது உங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயல் ஆகும். அவரது முன் யோசனையற்ற செயல், எண்ணங்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அவருக்கு நன்மை ஏற்படும் வகையிலும் நீங்கள் இருவரும் சேர்ந்து உற்சாகமான ஓர் உடன்படிக்கைக்கு வர வேண்டும்.

நண்பர்களுடன் செல்வது வாடிக்கையாக இருக்கும்போது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு மாற்று ஏற்பாட்டை செய்துவிட்டு, துணைவருடன் நீங்கள் இருக்கும் வகையில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவரிடமே பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.உங்கள் துணைவரைப் புரிந்து கொள்வதற்கான ரகசியம் என்னவென்றால், உங்கள் துணைவருக்குள் இருக்கும் பெறுபவர் நிலையிலிருந்து நீங்கள் பிரச்னையை அணுக வேண்டும். நீங்கள் ஒரு கருத்தை வெளியிட்டவுடனே அதற்கு எதிர்ப்பு வரலாம்.

உதாரணமாக, நீங்கள் குழந்தைகளுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பதை உங்கள் கணவர் விரும்பாமல், கிடைக்கிற ஓய்வு நேரத்தைக் கூட, தன்னுடன் செலவு செய்ய விரும்பாமல் இப்படி வீணடிக்கிறாயே என ஆதங்கப்படுகிறார். இந்த நேரத்திலும் அதற்கு ஒரு மாற்று வழியை நீங்கள் இருவரும் யோசிக்க வேண்டும்.‘குழந்தையை என் பெற்றோரிடம் விட்டுவிட்டு வா… நாம் வெளியே போய் வரலாம்’ என அவர் சொன்னால், இருவரும் சேர்ந்து, ‘அது சரி’ என்ற தீர்மானத்திற்கு உற்சாகமாக வந்து விட்டால், 2 மணி நேரத்தில் இருவருமே வெளியே சென்று வரலாம்.

பிரச்னை தீர்ந்து விடும். ஒரு பிரச்னையைத் தீர்க்க முனையும்போது அதற்காக பலவழிகளில் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளது. பிறரின் உணர்வுத் தேவைகளை சந்திக்க முயலும்போது அதற்கான பயிற்சியும் முயற்சியும் தேவை. சில நேரம் அதில் சிறுசிறு தவறுகளும் நிகழலாம். இவற்றைப் பழக்கத்தின் மூலம் சரி செய்து கொண்டு விட்டால் சிரமம் தெரியாது. இந்த விஷயத்திலெல்லாம் நீங்கள் பேரம் பேச வேண்டும். எல்லா நேரங்களிலும் பேரம் பேச முடியாது. நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவர் என்றால், அந்த இடத்தில் கூட்டு ஒப்பந்தக் கொள்கை பலன் தராது.

குடிப்பழக்கத்தை நீங்கள் முற்றிலும் நிறுத்திவிட்டால்தான் பேரம் பேச முடியும். வாழ்க்கையும் சுமுகமாகச் செல்லும். இப்படி விட வேண்டியவற்றை விட்டுவிட்டு உற்சாகமான முடிவுக்கு வர பேரம் பேசுவதற்கு வசதியான வழிமுறைகளை பின்பற்றினால், பெரும்பாலான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களிடம் உள்ள பிரச்னைகளையும் இதே வழியில் தீர்த்துக் கொள்ளலாம்.

கருத்து வேறுபாடு தோன்றி அது விலகிச் செல்கிற நிலைக்கு இழுத்துச் செல்லும் நிலை உருவாகி வருகிறது என்று தெரிந்தால், உடனடியாக அதைத் தவிர்க்கவும். காதல் யூனிட்டுகளை அதிகம் சேர்க்கிற வழிகளையும் யோசித்து அவற்றை டெபாசிட் செய்து கொள்ள வேண்டும். இதற்காக, உங்கள் துணைவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகளில் தீர்வை தேர்வு செய்யுங்கள். அவருக்கு மகிழ்ச்சி தராத எதையும் தவிருங்கள். இவ்வாறு செய்யும்போது காதல் யூனிட்டுகள் சேர்ந்து அன்பு அதிகமாகும். வாழ்க்கை இனிக்கும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டு ஒப்பந்தக் கொள்கை!! (மகளிர் பக்கம்)
Next post போலியோ சொட்டு மருந்து தினம் எப்போது?! (மருத்துவம்)