கர்ப்பகால காலணிகள்! (மருத்துவம்)

Read Time:2 Minute, 48 Second

மகப்பேறு பெண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு தருணம். இந்த சமயங்களில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். அதே சமயம் இந்த நேரத்தில் நாம் அணியும் உடை மற்றும் காலணிகள் இரண்டும் சவுகரியமாக இருப்பது அவசியம். எந்த உடைக்கு என்ன காலணிகள் அணியலாம் என்று தெரிந்துகொள்ளலாம்…

ஸ்னீக்கர் ஷூக்கள் : நீளமான குர்தா, பைஜாமாக்கள் அல்லது மகப்பேறு ஜீன்ஸ் உடைகளுக்கு மிகவும் பொருத்தமான காலணி. பார்க்க ஸ்டைலாகவும் இருக்கும். கால்களுக்கு மிருதுவாகவும் நடக்கும் போது குதிக்கால் வலி இல்லாமல் இருக்கும்.

ஸ்லைட்ஸ் : பாதத்தின் மேற்பரப்பில் குறுகிய பட்டையுடன் அமைந்திருக்கும் காலணி. ஹீல்ஸ் இல்லாமல் தட்டையாக இருப்பதால் அணிந்துகொள்ள மிகவும் வசதியாக இருக்கும். வீட்டிலேயே கூட அணிந்து கொள்ளலாம். இந்த காலணிகள் பல்வேறு
வண்ணங்களில் கிடைக்கிறது.

கோலாபுரி செருப்புகள் : எத்தினிக் உடைகள், கர்ப்பகாலத்தில் ட்ரடிஷனல் குர்தாக்களை அணியும் போது இந்த கோலாபுரி செப்பல்களை போட்டுக்கொள்ளலாம். கையால் வடிவமைக்கப்பட்ட தோல் செருப்புகள். இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்துவதால் எந்த வித அசவுகரியங்களையும் உணர மாட்டீர்கள்.

பிளாட்ஸ் : கர்ப்பகாலத்தில் ஹீல்ஸ் அணியக் கூடாது. காரணம் அந்த சமயத்தில் கால்வலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஹீல்ஸ் அணியும் போது அது மேலும் அந்த வலியைத் தூண்டும். அதனால் மருத்துவர்கள் ஹீல்ஸ் அணிய வேண்டாம் என கர்ப்பிணிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள். கர்ப்ப காலத்தில் சிறந்த காலணிகள் பிளாட்ஸ். மிகவும் வசதியாகவும் பல வடிவங்களில் கிடைக்கிறது. கால்களுக்கும் இதமானது.

கிளாக்ஸ் : க்ளாக்ஸ் என்பது ஒரு வகையான ஷூ. கர்ப்பகாலத்தில் மட்டுமல்ல எந்த நேரத்தில் அணிந்தாலும் ஒரு வித சவுகரியமான உணர்வினை கொடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!!! (மருத்துவம்)
Next post வயதானால் இன்பம் குறையுமா? (அவ்வப்போது கிளாமர்)