கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 17 Second

*பொரியல் செய்யும்போது உப்பு அல்லது காரம் அதிகமாகி விட்டால், சிறிது ரஸ்க் பொடி அல்லது ‘வாட்டிய பிரட்டை’ உடைத்து தூவி கிளறினால், சரியாகி விடுவதுடன், சுவையும் கூடும்.

*சாதம் வடித்த நீரில், சப்பாத்தி மாவை கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவை இரட்டிப்பாக இருக்கும்.

– எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீரங்கம்.

*ரசத்தை இறக்கி வைத்ததும் ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப்பொடியாக நறுக்கிப்போடுங்கள். மணமும், ருசியும் இருக்கும்.

*வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கும்போது அதனுடன் சிறிது உப்பு, சர்க்கரை இரண்டில் ஒன்றை ஒரு சிட்டிகை போட்டு வதக்குங்கள். சீக்கிரம் வெங்காயம் வதங்கி பொன் நிறமாகும்.

– எஸ்.பத்மபிரியா சதீஷ், சென்னை.

*பயிறு, கொண்டைக்கடலை போன்ற தானியங்களை ஊற வைத்து தேவையானவற்றை மட்டும் முளை கட்டிவிட்டு மீதியை ஃபிரிட்ஜ்ஜில் வைத்தால் வாசனை வந்துவிடும். இதனைத் தவிர்க்க: எலுமிச்சை சாறு பிழிந்து அந்த தானியங்களின் மேல் சிறிதளவு தூவினால் இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் வாசனை வராது. காற்று புகாத டப்பாவில் வைப்பது அவசியம்.

– எஸ். நிரஞ்சனி, சென்னை.

*பாதி எலுமிச்சம்பழம் மீதமாகி விட்டால், அதன் மீது சிறிது உப்பைத் தடவி வைத்துவிட்டால் பழம் கெடாமல் இருக்கும்.

*சர்க்கரையில் சோம்பு சிறிது போட்டு வைத்தால் எறும்பு வராது.

*வற்றல், வடாம், அப்பளம் இவற்றை பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் எண்ணெய் கமறல் இருக்காது.

*ஜாம் கெட்டு விடாமல் இருக்க அதில் 1 டீஸ்பூன் இஞ்சிச்சாறு கலந்து வைக்க வேண்டும். ஜாம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

– ஆர்.எம்.பிரதிக்‌ஷா, திருச்சி.

*இட்லிக்குச் சட்னி அரைக்கும்போது புளிக்குப்பதில் தோல் சீவிய சிறிய மாங்காய்த்துண்டை சேர்த்து அரைத்தால் சட்னி சுவையுடனும், வாசனையுடனும் இருக்கும்.

*கொழுக்கட்டை செய்யும்போது கொஞ்சம் ஜவ்வரிசியை ஊற வைத்து, அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து மாவைக் கிளறினால் கிண்ணம்போல சொப்பு செய்யும்போது சுலபமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

– அனிதா நரசிம்மராஜ், மதுரை.

*தக்காளி சட்னி செய்யும்போது வறுத்த எள் பொடியை சேர்த்தால் சுவை கூடும்.

*காய்ச்சிய பாலில் உறை ஊற்றி கோதுமை மாவில் கலந்து தோசை வார்த்தால் புதிய ருசி அருமையாக இருக்கும்.

– நா.பாப்பா நாராயணன், பாளையங்கோட்டை.

*பூரிக்கு மாவு பிசையும்போது பால் பாதி, தண்ணீர் பாதி சேர்த்து இரண்டு ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் பூரி அப்படியே பலூன் போல் பொங்கியே இருக்கும். அமுங்கி போகாது. எண்ணெயும் குடிக்காது.

– உஷா ராஜகோபாலன், கர்நாடகா.

*கோதுமை மாவில் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

– டி.ஜோதிபாய், காஞ்சிபுரம்.

*தயிர் சீக்கிரம் தோய வேண்டும் என்றால் பாலில் மோராக உறை ஊற்றினால், சீக்கிரம் தயிர் தோயும். தயிராக உறை ஊற்றினால், ஸ்பூனால் நன்கு கலக்க வேண்டும்.

*வாழைக்காய் பூ, தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

*பொரியலுக்கு போடும் தேங்காய் துருவல் இளசாக இருந்தால் சிறிது வறுத்து பின் பொரியலில் சேர்த்தால் பொரியல் அதிக நேரம் நன்றாக இருக்கும்.

– டி.என். ரங்கநாதன், திருச்சி.

*தேங்காய் பர்பி செய்யும்போது, சிறிது கடலை மாவு சேர்த்து செய்தால், சுவை அருமையாக இருக்கும்.

*குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் கொஞ்சம் அரிசியை வறுத்து நைசாக அரைத்து குழம்பில் கலந்துவிட்டால், அதிகப்படியான உப்பு குறைந்துவிடும்.

*எலுமிச்சைபழ சர்பத் தயாரிக்கும்போது கொஞ்சம் இஞ்சிச்சாற்றைக் கலந்தால் சர்பத் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

– ஆர். மகாலட்சுமி, சென்னை.

*ராகி ரொட்டி செய்யும்போது அதனுடன் சிறிது வடித்த சாதம், கோதுமை மாவு சிறிதளவு சேர்த்து ராகி மாவுடன் பிசைந்து ராகி ரொட்டி செய்தால் அது உடையாமல் வரும்.

*ராகி அடை செய்யும்போது பிசைந்த மாவுடன் வெங்காயம், ஏதேனும் கீரை வகைகள் மற்றும் பச்சை மிளகாய் வதக்கி அடை மாவுடன் சேர்த்து அடை செய்ய பிரமாதமாக இருக்கும்.

– ஆர்.மோனிஷா, வேலூர்.

*கருணைக்கிழங்கை புளித்த தயிரில் ஊற வைத்து சமைத்தால் சாப்பிடும்போது அரிப்பு இருக்காது.

*குருமா செய்யும்போது சிறிது இஞ்சியையும், ஓமத்தையும் சேர்த்தால் சுவை கூடும். எளிதில் ஜீரணமாகும்.

*பஜ்ஜிக்கு மாவு கரைக்கும்பொழுது ஒரு ஸ்பூன் எண்ணெயும், நெய்யும் கலந்து காய்ச்சி மாவில் ஊற்றி செய்தால் எண்ணெய் அதிகம் குடிக்காமல் பஜ்ஜி வரும்.

*கீரை ருசியாக இருக்க வேண்டுமா? சிறிது சர்க்கரை கலந்த நீரில் ஊற வைத்து பிறகு சமைத்தால் கீரை ருசியாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகத்தை உணவு மூலம் பாதுகாக்கலாம்!! (மருத்துவம்)
Next post சிறுநீரகத்தை பாதுகாக்க 7 வழிகள்!! (மருத்துவம்)