ரெக்க கட்டி பறக்கும் பெண்கள்..!! (மகளிர் பக்கம்)
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் போய், குடும்பப் பொறுப்பு மட்டுமில்லாமல் வேலைக்கு சென்று வீட்டுப் பொறுப்பையும் ஏற்று வருகிறார்கள். இவ்வாறு பல தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் பற்றிய சிறு கண்ணோட்டம்.
சின்னபொண்ணு, சுடர்வாணி, பத்துல்லா பீவி, ஹாஜிரா… இவர்கள் நால்வரும் சென்னையின் பிரபல கறிக்கடைகளில் வேலை பார்க்கிறார்கள். ‘‘நாங்க பெரிசா படிக்கல. இந்த காலத்தில் ஒருவரின் சம்பாத்தியம் குடும்பத்தை நடத்த பத்தாது. பெண்களும் வேலைக்கு போனாதான் சமாளிக்க முடியும். எங்கள மாதிரி படிக்காதவர்களுக்கு வீட்டு வேலை, சமையல் வேலைய தவிர வேற என்ன வேலை செய்ய முடியும். எங்க வறுமையை போக்க நாங்க துணிந்துதான் இந்த வேலையில் களம் இறங்கி இருக்கிறோம். சுமார் 20 ஆயிரம் சம்பளம் தராங்க. குடும்பம் நிம்மதியா இருக்கு’’ என்கின்றனர் நால்வரும் கோரசாக.
‘‘கலை மேல் இருந்த என் ஆர்வத்தை புரிந்து கொண்டு அதற்கென பிரத்யேக ஆசிரியர் அமைத்து எனக்கு ஓவியம், பெயின்டிங் எல்லாம் என் பெற்றோர் சொல்லிக் கொடுத்தனர்’’ என்று பேச ஆரம்பித்தார் கிரிஸ்டினா ரஞ்சன். ‘‘அப்ப ஆரம்பித்த அந்த தூண்டுதல்தான் இன்று சர்வதேச அளவில் என்னுடைய கைவினைப் பொருட்களுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. ஒற்றை ஆளாக தொடங்கிய இந்த ஆர்ட் அண்டு கிராப்ட் பிசினெசில் இன்று அரை டஜன் பேர் என்னுடன் கைகோர்த்து உள்ளனர்’’ என பூரிக்கிறார் கிறிஸ்டினா ரஞ்சன்.
‘‘மார்க்கெட்டில் உள்ள குழந்தைகளுக்கான சோப்பை என் குழந்தைக்கு பயன்படுத்திய போது அவளுக்கு ்அலர்ஜி ஏற்பட்டது. அவளுக்காகவே சருமத்தை பாதிக்காத சோப் ஒன்றை தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டேன். இப்ப என்னுடைய மூலிகை சோப் கொங்கு மண்டலத்தில் சூப்பர் ஹிட்’’ என்கிறார் ேஹமா ராணி. ‘‘ஒரு சோப்பில் என்னுடைய பயணம் ஆரம்பித்து இப்போது 15 வகை சோப்கள், ஹேர் ஆயில், ஷேம்பு… என உற்பத்தி செய்கிறோம். மலேசியாவிற்கும் ஏற்றுமதி செய்கிறேன். மகளுக்காக நான் எடுத்த சிறு முயற்சி என்னை ஒரு தொழில்முனைவோராக மாற்றியுள்ளது. சுயதொழிலுக்கு முயற்சிக்கும் யார் வேண்டுமானாலும் வாய்ப்பு தர நான் தயார்’’ என்கிறார் ஹேமா ராணி.
சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் திவ்யா கல்லூரி காலத்தில் ஆரி டேலைப்பாட்டினை கற்றுக்கொண்டவர் 2008ம் ஆண்டு முழுமையான தொழிலாக தொடங்கினார். ‘‘1400 பேருக்கு மேல் பயிற்சி அளித்திருக்கேன். லாக்டவுன் போது கூட ஆன்லைனில் பயிற்சி எடுத்தேன். கைத்ெதாழில் தெரிந்தா, ஒரு நிறுவனத்தில் கைகட்டி வேலை பார்க்கணும்னு அவசியமில்லை. கற்ற கலையையே தொழிலாக மாற்றும் போது நமக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். குடும்பத்திற்கும் சப்போர்ட்டா இருக்கலாம்’’ என்கிறார் திவ்யா.
‘‘திருமணத்திற்கு பின், பொழுதுபோக்காக பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்தேன். படிச்ச கலையை வீணாக்க வேண்டாம் என்று ஆதம்பாக்கத்தில் அழகு நிலையம் ஒன்றை ஆரம்பித்தேன்’’ என்கிறார் கங்கா. ‘‘சோம்பேறியாக இருக்க பிடிக்காமல் தொடங்கிய தொழில் இந்த 13 ஆண்டு களில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கெட்டியாக பற்றிக் கொண்டு முன்னேறினால் எந்த பெண்ணாலும் சாதனை படைக்க முடியும்’’.
ராஜபாளையம் அடுத்த தளவாய்புரத்தில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார் ‘லவ்லி நைட்டி’ உரிமையாளர் சாந்தி பாலசுப்ரமணியம். ‘‘கணவருக்கு ஊர் ஊராக கண்டாங்கி சேலை விற்பது தொழில். கணவருக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு தூணாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறு வயதில் கற்றுக் கொண்ட டைலரிங் தொழிலை தொடங்கினேன். பலரும் கை கொடுத்ததால், நைட்டி தயாரிக்கத் தொடங்கினேன். அப்படி தொடங்கிய கைத்தொழில் இன்று ஆலமரமாக விஸ்வரூபம் எடுத்து 100க்கும் அதிக பெண்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க முடிகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவிலும் எங்க தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Average Rating