சிறுநீரகத்தையும் பாதிக்கும் திக் திக்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 7 Second

மனிதனுக்கு ஏற்படும் உணர்ச்சிநிலை மாறுபாடுகளுக்கும் உடல் உறுப்பு பாதிப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது சீன மருத்துவம். அதன்படி…

மகிழ்ச்சி

மகிழ்ச்சி எப்போதும் இதயம் சம்பந்தப்பட்டது. ரொம்பவும் சந்தோஷமாக இருந்தால் தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வீர்கள். இதயம் வேகமாக துடிப்பதை உணர்வீர்கள். ஒரு வித கிளர்ச்சித் தன்மை உங்கள் உடலில் இருக்கும். அதனால், அளவோடு சந்தோஷப்
படுவது நல்லதாம்!

கோபம்

அதிகம் கோபப்படுபவர்களுக்கு கல்லீரலும் பித்தப்பையும் பாதிப்புக்குள்ளாகும். உடலில் பித்தத்தின் அளவு அதிகமாகும். தேவையற்ற உயிரியல் மாற்றங்கள் உடலில் உண்டாகி தலைவலி, மயக்கம், தலைசுற்றல் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படவும் கோபமே காரணம். ஆகவே… நோ டென்ஷன்… ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கவலை

அதிகமாக கவலை கொள்கிறவர்களுக்கு நுரையீரலும் பெருங்குடலும் பாதிப்படைகிறதாம். மூச்சு விடுவதில் சிரமமும் பெருங்குடலில் கிருமித் தொற்றும் எளிதாக ஏற்படுகிறது. டோன்ட் வொர்ரி… பி ஹேப்பி!

துயரம்

எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் துயரமான சம்பவங்கள் நடந்திருக்கும். அதைக் கடந்து வராமல் துயரத்திலேயே எந்நேரமும் மூழ்கிக் கிடந்தால், உடலின் சக்தியை இழக்கச் செய்து முடக்கிப்போடும். நுரையீரல் பாதிப்படைந்து சுவாச நோய்கள் வருவதற்கும் வழிவகுக்கும். துயரத்தை விரைவில் கடந்து போவதே ஆரோக்கியத்துக்கான வழி.

ஆழ்ந்த சிந்தனை

ஆழ் சிந்தனைகள் செய்பவர்களுக்கு மண்ணீரல் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். இது உடல் சோர்வையும் கவனக்குறைபாடுகளையும் உருவாக்குவதால், அதீத சிந்தனைகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பயம்

அதிகம் பயப்படுபவர்களுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். சிறுநீர் வருவது தெரியாமல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் அதிக பயத்தினால் ஏற்படுகிறது. ஆகவே,அச்சம் தவிர்ப்போம்.

திகில்

மனிதன் திகில் என்ற திடீர் பயத்தை அனுபவிக்கும் போது இதயம் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகிறதாம். எனவே, திக் திக் படங்களைப் பார்ப்பதையும் திகில் கதைகளை படிப்பதையும் நிறுத்தலாமே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃபுட் டெக்ரேஷன்! (மகளிர் பக்கம்)
Next post சிறு கல்லும்…. சில உணவுக்குறிப்பும்!! (மருத்துவம்)