பவள மகிமை!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 38 Second

*பவளமல்லி, பவழமல்லி, பாரிஜாதம், நைட் ஜாஸ்மின் என்று பல பெயர்களில் குறிப்பிடும் இது குறு மரவகையைச் சேர்ந்தது.

*இதன் பூ மல்லிகைப்பூ போன்று வெண்மையாகவும், காம்பு பவளம்போல் சிவந்தும் காணப்படும். இதனாலேயே இதற்கு பவளமல்லி எனப்பெயர். இது மல்லிகை இனத்தைச் சேர்ந்தது.

*பூஜைக்கு மிகவும் உகந்த மலர். வீட்டுத்தோட்டங்களிலும் காணப்படும் இது சில கோயில்களில் தலவிருட்சமாகவும் காணப்படுகிறது.

*வாசனை மிகுந்த மலர். மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இதன் மணம் எல்லோருக்கும் பிடித்த ஒன்றாகும்.

*எல்லா மலர்களும் காலையில் பூத்து மாலையில் உதிரும் தன்மை கொண்டது. ஆனால் இது மட்டும் அதிகாலையில் மலர்ந்து காலையில் உதிர்ந்துவிடும். ப்ரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் இதற்கு ப்ரம்ம தர்ஷிணி என்ற பெயரும் உண்டு.

*இதன் சாயத்தை பட்டுப்புடவைகளுக்கு நிறமூட்டியாக உபயோகப்படுத்துவர். இது மட்டுமல்லாது இது மருத்துவ குணம் கொண்டது. வேர், பட்டை, இலை, பூ, காய், விதை என்று எல்லாமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

*இலையை கஷாயம் வைத்து குடித்தால் ஜுரம் குணமாகும். இலை, பூவோடு சிறு துண்டு இஞ்சி, மிளகு சேர்த்து குடித்தால் ஜுரம் போயே போச்சு. இப்போதுள்ள ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சலுக்குக்கூட இந்த கஷாயம் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*இது காற்றிலுள்ள மாசுதனைக்கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதனாலேயே இதை முன்நாட்களில் வீட்டு வாசல் பக்கம் வளர்த்து வந்தார்கள். அழகு, வாசனை, மருத்துவ குணம் கொண்ட இந்த பாரிஜாதம் ஆஞ்சநேயருக்கு மிகவும் உகந்த மலராகும்.

*மூட்டு வலி, முதுகுவலி, இடுப்பு வலி போன்ற எலும்பு வலிகளுக்கும், நரம்பு இழுத்துக்கொள்ளும் பிரச்னைக்கும் நல்லது.

*பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு இதன் கஷாயம் மிகச்சிறந்த மருந்து. மேலும் மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.

*குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்து வயிற்றுவலி வந்தால், இதன் இலைச்சாற்றில் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து கொடுத்தால் மலத்துடன் பூச்சிகள் வெளிவந்துவிடும்.

*இதன் காயை உலர்த்தி பொடி செய்து 1 பங்குக்கு 2 பங்கு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் அரிப்பு, பொடுகு, பேன் தொல்லை தீரும். இவ்வளவு மகத்துவமிக்க இந்த செடியை நாமும் நம் வீட்டில் வளர்த்து இதனால் கிடைக்கும் எல்லா நல்ல பலன்களையும் அடையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்! (மகளிர் பக்கம்)
Next post உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)