இல்லத்தரசிகள் உடல் ஆரோக்கியம் பேணுவது எப்படி…!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 35 Second

மாற்று மருத்துவம், ஒருங்கிணைந்த சிகிச்சை, பாரம்பரிய பண்டுவம் – இவையெல்லாம் அண்மை நாட்களில் அதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கிற பொருள்கள். குறிப்பாக கொரோனா வருகைக்குப் பிறகு இவை கூடுதல் கவனம் பெற்றுள்ளன. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்ந்தாலும், இந்த தலைமுறை பாரம்பரியமான சில விஷயங்களிலும் தங்களை இணைத்துக் கொள்கிறது. இவ்வாறாக மாற்று மருத்துவத்தை நோக்கி நகர்பவர்களுக்கு, PCOD, PCOS, தைராய்டு பிரச்சினைகள், ஒபேசிட்டி, சுகர், ஸ்லிம்மிங், சொரியாசிஸ், ஸ்கின் டிசிஸ், பிக்மண்டேஷன், குழந்தைப் பேறு… போன்று எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் நூறு சதவீதம் இயற்கை முறையில் குணப்படுத்தி வருகிறார் டாக்டர் காயத்திரி.

‘‘தலை முதல் கால் வரை இருக்கிற தோல், உள் உறுப்புகள் பிரச்சினைகளுக்கு இயற்கை மருத்துவம் முறையில் தீர்வு காண்கிறோம். பொதுவாக தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தைராய்டு, ஹார்மோன் இன்பேலன்ஸ், ஹீமோ குளோபின் குறைபாடு… போன்ற காரணங்களால் வருகிறது. உங்களுக்கு எதனால் வந்திருக்கிறது என்று பார்த்து அதற்கேற்றாற்போல் சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுவாக தைராய்டு வந்தால் அதை குணப்படுத்தவே முடியாது. காலம் முழுவது மருந்து சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால், 100% சரி செய்த ரெக்கார்ட் எங்களிடம் இருக்கிறது.

நம் உடலின் உறுப்பில் ஏதோ ஒன்றின் செயல்பாடு குறையும் போதுதான் நமக்கான நோய்கள் வருகின்றன. தைராய்டு சுரப்பிகள் செயல்பாடு கம்மியாகும் போது தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. இங்கு கொடுக்கப்படும் தெரப்பி மூலம் அந்த சுரப்பிகளை செயல்படுத்த செய்கிறோம். இதன் மூலம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். கணையத்தில் இன்சுலின் சுரப்பி தப்பும் போதுதான் நீரிழிவு வருகிறது. அலோபதியில் இன்சுலின் வெளியில் இருந்து கொடுக்கப்படுகிறது. இயற்கை மருத்துவத்தில் அந்த கணையத்தை வேலை செய்ய வைக்கிறோம்.

அதிகப்படியான கார்போஹைரேட் எடுக்கும்போது கணையம் அதன் செயல்பாட்டை மந்தகதியாக்கும். எனவே உணவுமுறையினை மாற்றி அதை ஆக்டிவேட் செய்வதற்கான மருந்து கொடுத்து, அதனோடு யோகா தெரப்பியும் கொடுக்கிறோம்” என்று கூறும் மருத்துவர் காயத்ரி, ”சித்த மருத்துவம் என்றால் பத்தியம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இதை தவிர்க்கிறார்கள். ஆனால், பத்தியம் என்பதை விட, ஒருவர் உடலுக்கு ஒவ்வாத சில விஷயங்களை நாங்கள் தவிர்க்க சொல்கிறோம். எங்களை பொறுத்தவரை டயட் என்பது சாப்பிடாமல் இருப்பதில்லை” என்கிறார்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அதிகமாக வேலை செய்வதினால் அவர்கள் உடலின் ஆரோக்கியத்தை எப்படி பேண வேண்டும் என்பது பற்றி கூறும் மருத்துவர் காயத்திரி, “வீட்டில் வேலை செய்து ஓடிக்கொண்டு இருக்கிறவர்களுக்கு கலோரிஸ் அதிகம் தேவைப்படும். அவர்கள் கார்போ ஹைட்ரேட்டை குறைத்துக்கொண்டு புரோட்டின் நிறைய எடுத்துக்கணும்.

பாதாமை ஊறவைத்து, தோலை நீக்கி சாப்பிடலாம். மீல்மேக்கர் என்று சொல்லக் கூடிய சோயா சங்க்ஸ் எடுத்துக்கலாம். அசைவ உணவாக இருக்கும் போது சிக்கன் சாப்பிடும் போது, அரிசியின் அளவை குறைத்து, கீரை சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக வீட்டில் அசைவ உணவு சமைக்கும்போது வெஜ் சமைக்க மாட்டோம். ஆனால், கீரையோ மற்ற காய்கறிகளோ எடுத்துக் கொள்ளலாம். இது மதிய நேரம் மட்டும். இரவில் கீரை சாப்பிடக்கூடாது. சாதத்தின் அளவு குறைத்து காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

அந்த காலத்தில் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை வெளக்கெண்ணெய் குடித்து வயிறை சுத்தம் செய்வோம். தொப்புளுக்கு எண்ணெய் விடுவது, எண்ணெய் தேய்த்து குளிப்பது எல்லாம் வழக்கத்துக்கு மாறாக போய்விட்டது. ஐ.டி வேலையில் இருக்கும் பெண்களிடம், ‘வாரத்தில் எத்தனை நாள் தலைக்கு குளிக்கிறீங்க’னு கேட்டால் ‘வீக்லி ஒன்ஸ்’னு சொல்லுவாங்க. தினமும் தலைக்கு குளிக்காவிட்டாலும் வாரத்திற்கு நான்கு நாளாவது தலைக்கு ஊத்தலாம். உடல் சுத்தம் ரொம்ப முக்கியம்.

நான் பியூட்டிஷனாகவும் இருப்பதால் நிறைய பேர் சருமத்தை சுத்தம் செய்ய வருவாங்க. பிளிச்சீங், ஒயிட்னிங் ட்ரீட்மெண்ட் பண்ணாலும் அதிகபட்சம் பத்து நாள். அதன் பின் அவர்களின் ஒரிஜினல் சருமம் வெளியாகும். காரணம் கல்லிரல் பிரச்னை இருக்கும். நம் சருமத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைக்கும் உள் உறுப்புகளின் செயல்பாடு இணைந்திருக்கிறது. இவ்வாறாக நம் உடலில் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது.

அதை கண்டு சரிவர சீராக்குவதுதான் எங்கள் வேலை. நம் உடலில் மருந்து ஒன்று வேலை செய்ய வேண்டுமென்றால் சிறுநீர் மற்றும் கல்லீரல் செயல்பாடு ரொம்ப முக்கியம். இதை எல்லாம் சரிவர பார்க்காமல் செய்யும் போது எந்த மருந்தையும் நம் உடல் ஏற்றுக்கொள்ளாது” என்று கூறும் காயத்திரி, தங்கள் மருத்துவத்தின் அடிப்படையான சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

‘‘முதல் 15 நாட்களுக்கு ‘க்ளன்சிங்’. இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். அடுத்து மருந்து. சித்தா மருந்து, சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். அதை குறைந்த அளவு கொடுத்து பழக்குவோம். மலசிக்கல், பைல்ஸ் போன்ற பிரச்சினைகளுக்கும் இதில் தீர்வு காணலாம். பிக்மண்டேஷன் என்று சொல்ல கூடிய சர்ம பிரச்சினையினை குணப்படுத்தவே முடியாது என்பார்கள். அதற்கும் நிரந்தரத் தீர்வு உண்டு, இதனோடு குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். வெறும் மருந்தோடு மட்டுமல்லாமல், அவர்கள் உடலுக்கேற்ற உணவின் துணையோடு சரி செய்கிறோம்” என்று கூறும் மருத்துவர் காயத்திரி காஸ்மெட்டாலஜி வகுப்பும் எடுக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)
Next post உணவே மருந்து – சுறுசுறுப்பை தரும் கோதுமை!! (மருத்துவம்)