பழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்?! (மருத்துவம்)

Read Time:6 Minute, 34 Second

பழங்களை அப்படியே கடித்து உண்பது, பழச்சாறாக அருந்துவது போல வேக வைத்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. சில நேரங்களில் மருத்துவர்களும் இதனை பரிந்துரைக்கிறார்கள். பழங்களை வேக வைத்து உண்ண வேண்டிய அவசியம் என்ன? அதனால் பலன்கள் கிடைக்குமா? உணவியல் நிபுணர் பத்மினியிடம் கேட்டோம்…

பழங்களை வேகவைத்து உண்பது நல்லதா?

‘‘பழங்களை அப்படியே கடித்து சாப்பிடுவதே நல்லது. வேகவைக்கும்போது சில வைட்டமின்களும், தாதுக்களும் குறைந்துவிட வாய்ப்பு உண்டு. அதனால் வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், ஒரு சில பழங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. வேக வைத்தபின் இன்னும் மேம்பட்டு சிறந்த சத்துக்களைத் தருகிறது. இது வேகவைக்கும் முறையைப் பொறுத்தது. ’’

பழங்களை வேகவைத்து உண்ண வேண்டிய அவசியம் என்ன?

‘‘உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு செரிமான சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு பழங்களை வேக வைத்துக் கொடுக்கும்போது செரிமானத்தில் பிரச்னைகள் எதுவும் வராது. அதனால்தான் பழங்களை வேக வைத்து சாப்பிடச் சொல்கிறார்கள். அதேபோல் சில உணவுகளில் இருக்கும் ஆண்டி ஆக்சிடெண்டுகளை(Antioxidants) உடல் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளவும் வேக வைத்த பழங்கள் உதவுகிறது.

முக்கியமாக பழங்களை வேக வைக்கும்போது அதன் கலோரி அளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் நடக்கிறது. உதாரணத்துக்கு ஒரு ஆப்பிளை வேக வைக்கும்போது அதன் கலோரி 95 என்பதிலிருந்து 77 என்கிற அளவுக்குக் குறைகிறது. எனவே, எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களும் பழங்களை வேக வைத்து உண்ணலாம்.’’

எல்லா பழங்களையும் வேக வைத்து உண்ணலாமா?

‘‘ஆப்பிள், வாழைப்பழம், அன்னாச்சி பழம், பிளம்ஸ், பேரிக்காய், அத்திப்பழம், செரிப்பழம் முதலிய பழங்களை வேக வைத்து உண்ணலாம். பழங்களை வேக வைப்பதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதிக தண்ணீர் வைத்து வேக வைப்பதால் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்காது. எனவே, பழங்களை ஒரே மாதிரி வெட்டி குறைவான தண்ணீர் வைத்து அவிக்க வேண்டும். மைக்ரோவேவ் முறையிலும் அவிக்கலாம்.’’

வேக வைக்கும்போது என்னென்ன பழங்கள் சிறந்த சத்துக்களைத் தருகிறது?

‘‘ஆப்பிள், நேந்திரம், பேரிக்காய் போன்ற பழங்கள் வேக வைக்கும்போது, அதன் சத்துக்கள் சற்று கூடுதலாகிறது. அதற்காக மிக அபரிமிதமாகவும் சத்துக்கள் கூடும் என்று நினைக்க வேண்டியதில்லை. இது மிகவும் குறைவான புள்ளி ஒரு சதவீதம் (.1%) மட்டுமே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

100 கிராம் ஆப்பிளை வேக வைத்து சாப்பிடும்போது கார்போஹைட்ரேட்டில் 13.4 கிராம், புரதம் 0.2 கிராம், நார்ச்சத்து – 1 கிராம், வைட்டமின் சி 1 மில்லிகிராம் கிடைக்கிறது. அதேபோல் 100 கிராம் வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடுபவர்கள் பெறும் சத்து கார்போஹைட்ரேட் 27.2 கிராம், புரதம் 1.2 கிராம், நார்ச்சத்து 0.4 கிராம், வைட்டமின் சி – 7
மில்லிகிராம் கிடைக்கிறது.’

எந்த தட்ப வெப்பநிலையில் வேக வைக்க வேண்டும்?

‘‘பழங்களை வேக வைக்கும்போது 212 டிகிரி ஃபாரன்ஹீட் தட்பவெட்ப நிலையில் வேக வைக்கலாம். முடிந்தால் இதற்குக் குறைவான சூட்டிலும் வேகவைப்பது நல்லது.’’

வேக வைத்து உண்பதால் சத்துக்கள் குறையாதா?

‘‘பழங்களை வேக வைக்கும்போது கண்டிப்பாக சில சத்துக்கள் குறையவே செய்யும். அதாவது High sensitive nutrition, Vitamin C, Folate போன்ற சத்துக்கள் குறையும். ஏனெனில், வேக வைக்காத பழங்களில் நார்ச்சத்து மற்றும் Natural energy’s nutrition’s & mineral’s இருப்பதால் உடல் எடை குறைப்பதற்கும், இதய நோய், ரத்தக்கொதிப்பு மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கு நிவாரணியாக உதவுகிறது.””

பழங்கள் வேக வைத்த தண்ணீரை என்ன செய்யலாம்… குடிக்கலாமா?

‘‘வேகவைத்த பழங்களின் தண்ணீரை தாராளமாகக் குடிக்கலாம். அது சுவையானதாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தவும் செய்யும். ஹைட்ரேஷன்(hydration) என்ற நீர்ச்சத்தைக் கொடுக்கும். மேலும் நெஞ்செரிச்சல், உடல் எடை குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரி செய்யவும் உதவும்.’’

வேக வைத்த பழங்களை யாரெல்லாம் உண்ணலாம்?

‘‘6 மாத குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வேக வைத்த பழங்களை உண்ணலாம். வேக வைத்த பழங்கள் சீக்கிரமாக ஜீரணம் தருவதே அதற்கு காரணம், இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் தடுக்கும் அருமருந்து என்பது குறிப்பிடத்தக்கது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலம பாத கமலம! (மகளிர் பக்கம்)
Next post படுக்கையறையில் படிகள் பல ? (அவ்வப்போது கிளாமர்)