பழங்களின் ராஜா மாம்பழம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 43 Second

பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனியாகும். இது இனிய சுவையும், பல்வேறு சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே நமது நாட்டில் காட்டு மரமாக மா வளர்ந்துள்ளது. மாம்பழத்தின் தாயகம் நமது இந்தியா மற்றும் மலேசியப் பகுதிகளாகும். இலக்கியங்களிலும், புராணங்களிலும் இதற்கென தனி இடம் உண்டு.

மருத்துவப் பயன்கள்

* மாம்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
* தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும்.
* மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தை கூட்டும்.
* பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
* மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியை கூட்டும், ரத்தத்தை ஊற வைக்கும்.
* மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
* கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
* மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்துவது சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.

* அமிலத்தன்மை கொண்டதால், வைட்டமின் ‘சி’ பற்றாக்குறை நீங்கும்.
* மாங்காயை நறுக்கி வெயிலில் உலர்த்தி மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.
* காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்தினால் ரத்தபேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.
* மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.
* மாம்பிஞ்சுகளை துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்.

மா இலை

* இலையைச்சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காயங்கள் மீது தடவ இவைகள் விரைவில் ஆறும்.
* மாந்தளிரை மென்று தின்று வர பல் ஈறு உறுதிப்படும்.
* இலையை தீயிலிட்டு புகையை சுவாசிக்க தொண்டைவலி மாறும்.
* இதன் துளிர் இலைகளை பொடியாக்கி தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்போக்கு நிற்கும்.
* மாம்பூக்களை உலர்த்தி பொடியாக்கி தணலில் புகை போட கொசுக்கள் ஓடிவிடும்.
* உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி வயிற்றுப்போக்கின்போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.
* மாங்கொட்டை பருப்பை பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன வயிற்றுவலி குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேனிட்டி  பாக்ஸ்: ஃபவுண்டேஷன்!! (மகளிர் பக்கம்)
Next post வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்!! (மருத்துவம்)