சுதந்திர சுவாசம் அமைக்க சரித்திர நாயகியே துணையென வா!!

Read Time:7 Minute, 40 Second

இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தல் அல்லது அதிகாரபூர்வமாக ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா என்பது விவிலியத்தில் குழந்தை இயேசுவை அதன் பெற்றோர் சூசையப்பரும் மரியாளும் எருசலேமில் இருந்த கோவிலில் மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வைக் குறிக்கும் விழாவாக இருந்தது. கடவுளாக இருந்த போதிலும் மனித அவதாரத்தை தான் ஏற்றதினால் மனிதர்களுக்கு அக்கால வழக்கப்படி நிகழ்கின்ற அத்தனை சட்டங்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதன் முதல் அடையாளமாக இச் சடங்கு காணப்படுகின்றது.

ஏனெனில், அக்கால வழக்கப்படி இச் சடங்கானது ‘சுத்திகரிப்புச் சடங்காக’ நிகழ்ந்திருந்தது. பாவத்துடன் பிறக்கும் மனிதன் இச் சடங்கின் வாயிலாக சுத்திகரிக்கப்பட்டு இறைவனுக்கு உகந்தவனாக்கப்படுகிறான். இது பெப்ரவரி இரண்டு அன்று ஆண்டு தோறும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டது.

இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்திப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா புதிய ஏற்பாட்டில் லூக்கா எழுதிய நற்செய்தி (லூக்கா. 2:23-24) குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது.

மேற்கத்திய கிறிஸ்தவ திருச்சபைப் பாரம்பரியங்களில் இத்திருவிழா கேன்டில்மஸ் என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எரியும் திரிகளோடு பவனியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறிஸ்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும். கிறிஸ்து பிறப்புக் காலத்தை நிறைவு பெறச்செய்கின்றது. இங்கிலாந்து திருச்சபையில் அங்கிலிக்கன் சமூகத்தினரின் தாய் திருச்சபையில் இவ்விழா முதன்மைத் திருவிழாவாக 2 பெப்ரவரி அல்லது 28 ஜனவரி முதல் 3 பெப்ரவரி வரையான காலத்தில் இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.

இவ்வாண்டானது வட இலங்கை (யாழ்ப்பாணப் பட்டணம்) முழுவதும் புதுமை மாதாவின் அடைக்கலத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு நானூறாவது ஆண்டாகும். சில வரலாறுகள் தொலைக்கப்பட்டும், தொலைக்கடிக்கப்பட்டும் காணப்படுகின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு அழிவடையாமலும், பாதுகாப்பாகவும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது எமது மிகப்பெரும் கடமையாகும்.

யாழ். புதுமை மாதா வரலாற்றைப் பொறுத்தவரை அது நீண்டதொரு காலப்பகுதியைக் கொண்டதாகும். போர்த்துக்கீசர் தமது ஆட்சிக்காலத்தில் எழுத்து வடிவம் பெறும் ஆவணங்களை அவர்கள் பெரிதும் உருவாக்கவில்லை. ஏனெனில் அவர்கள் நாடுகளைக் கைப்பற்றுவதிலும், வியாபாரத்தை வழப்படுத்துவதிலும், மதத்தை பரப்புதலிலும் கூடிய கவனம் செலுத்தியதால் ஆகும். பின்னர் ஆட்சியமைத்த ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றோரும் அவர்களின் மத அடையாளங்களை அழிப்பதில் குறியாகக் கொண்டதாலும் ஆவணங்கள் காணாமல் போயின.

போத்துக்கீசர் அதிகம் அன்னை மரியாளை வணங்கி நின்றார்கள். அத்தோடு அன்னை மரியாளுக்கே அதிக ஆலயங்களையும் அமைத்தார்கள். அதில் முக்கியமானது யாழ். புதுமை அன்னை ஆலயமாகும். போத்துக்கீசரின் பல வெற்றிகளுக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் புதுமை அன்னை துணையிருந்தார். அவளுடைய புதுமைகள் எண்ணிலடங்காதவையாகவே காணப்பட்டன. இதன் அடையாளமே அவளின் அடைக்கலத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வாகும்.

கோட்டையில் வெற்றி மாதா ஆலயத்தில் புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தை செதுக்க மரம் ஒன்றை அங்கு பங்குத் தந்தையாக இருந்த பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த ‘பிரான்சிஸ்கோ டூ சான்ரோ அன்ரரோனியா’ என்னும் குருவானவரால் கேரளாவிலுள்ள கொச்சின் நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் அன்னையின் திருச்சொரூபத்தின் தேவை கருதி அது அன்னையின் திருச்சொரூபம் அமைக்க நாவாந்துறையில் வசித்துவந்த அன்னக்குட்டி என்பவரிடம் வழங்கப்பட்டது.

திருச்சொரூபத்தை அன்னக்குட்டியும், அன்னக்குட்டியின் இறப்பின் பின் அன்னக்குட்டியின் மகள் அஞ்சியாவும் செதுக்கி வந்தனர். அன்னக்குட்டியின் வீட்டில் திருச்சொரூபம் அமைக்கும் தறுவாயில் இடம்பெற்ற புதுமைகளால் திருச்சொரூபம் முடிவுறும் முன்னரே 1914ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி அன்னக்குட்டியின் வீட்டிலிருந்து கோட்டை வெற்றி மாதா ஆலயத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் எண்ணற்ற புதுமைகள் அன்னையால் நிகழ்த் தப்பட்டன.

இப்புதுமைகளால் இங்கு வாழ்ந்த கத்தோலிக்கர்கள் தமது பாதுகாவலியாய் அன்னையை ஏற்றுக்கொண்டு வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர் போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கோட்டையைக் கைப்பற்றிய போது அன்னையின் வழிபாடுகள் நிறுத்தப்பட்டு அன்னையின் திருச்சொரூபம் கடல் மூலமாக இந்தியாவின் கோவா நகருக்கு அருட்தந்தையர்களால் கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கு மை அழகு! (மகளிர் பக்கம்)
Next post சரி என்று நினைத்து நாம் செய்துவரும் மிகப்பெரிய தவறுகள் ! (வீடியோ)