ஆரோக்கியம் தரும் அமைதி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 44 Second

இன்றைய அவசர உலகில் வாழும் மக்களுக்கு, ‘அமைதி’ யின் மதிப்பு நன்றாகத் தெரியும். அதிலும் பெருநகரங்களில் வாழும் மக்கள் ஒலி மாசுபாடு காரணமாக அதிகப்படியாக உயர் ரத்த அழுத்தம், இதயநோய், காது இரைச்சல், தூக்கமின்மை போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் எச்சரிப்பதோடு கூச்சல் மிகுந்த இந்த சூழலில் வசிப்பவர்களுக்கு தேவைப்படும் ‘அமைதி’யின் முக்கியத்துவத்தை இப்போது அறிவியலும் வலியுறுத்துகிறது.

நகர மக்களுக்கு மட்டுமில்லை, வாழ்க்கையின் சில கட்டத்தில் எல்லோருக்குமே ‘அமைதி’ தேவைப்படுகிறது. அலைபாயும் மனதிற்கு வசதியானது; ஆறுதல் அளிப்பது; உடல், மனம், ஆன்மாவின் உத்வேகத்தை வளர்ப்பது என்பதால்தான் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்யும் ‘தியானம்’ மனநல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மாறாக கூச்சலான உலகம் நம் படைப்பாற்றலை குறைத்து, நம் உள்தொடர்பை மூழ்கடிக்கிறது. வறண்டுபோன நம் மூளையையும், ஆற்றல் இழந்த நம் உடலையும் அமைதி மீட்டெடுக்கிறது.

‘சத்தங்கள், நம் மூளையில் மனஅழுத்த ஹார்மோன்களை உயர் அளவில் தூண்டி ஒரு சக்திவாய்ந்த உடல்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. காதுகளின் வழியாக ஊடுருவும் சத்தமானது எலக்ட்ரிகல் சிக்னல்களாக மூளைக்குள் பயணிக்கிறது. நாம் தூங்கும் போது கூட, இந்த ஒலி அலைகள், மூளையின் நினைவகம் மற்றும் உணர்ச்சியோடு தொடர்புடைய அமிக்டலா(Amygdala) -வில் வினைபுரிந்து, மனஅழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டுகின்றன’ என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகும் Journal Brain இதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

டியூக் பல்கலைக்கழக மீளுருவாக்க உயிரியலாளரான (Regenerative biologist) இம்கே கிர்ஸ்டே மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேர அமைதி, நினைவக உருவாக்கம் தொடர்பான மூளைப் பகுதியின் புலன்களை உள்ளடக்கிய ஹிப்போகாம்பஸில் உயிரணு வளர்ச்சியைத் தூண்டுவதை கண்டறிந்துள்ளார்.

தற்போதைய டிஜிட்டல் உலகில், மூளைக்கு குறைந்த நேரமே ஓய்வளிக்கிறோம். நாம் தொடர்ந்து ஏராளமான தகவல்களை குப்பையைப்போல மூளைக்குள் திணிக்கிறோம். தொடர்ச்சியான ஏதாவது ஒன்றில் நாம் கவனம் செலுத்திக் கொண்டே இருப்பதால் முடிவுகளை எடுப்பதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் முக்கிய பகுதியான நமது மூளையின் ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸிற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறோம்.

மாறாக, நமக்கான தனி நேரத்தை ஒதுக்கி அமைதியாக இருக்கும்போது, இதன் வேலையைக் குறைப்பதன் மூலம்​​ பெரிய சிக்கல்களிலிருந்து வெளிவருவதிலும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் நிலையான கவனத்தை நாம் செலுத்த முடியும். மேலும், புதிய செல்கள் நியூரான்களாக வேறுபடுவதற்கும், மூளையின் அமைப்பில் ஒன்றிணைவதற்கும் ‘அமைதி’ உதவுகிறது;

அமைதியை நாம் அனுபவிக்கும்போது ​​நமது மூளை, உள் மற்றும் வெளிப்புற சூழல்களை நன்கு புரிந்துகொள்வதில் செயல்படவும் முடியும்’ என்பதை இம்கே கிர்ஸ்டேவின் ஆராய்ச்சி சொல்கிறது. மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கிய வாழ்விற்கு தேவைப்படும் அமைதியை ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களாவது கடைபிடிப்போம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Medical Trends!! (மருத்துவம்)
Next post மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன்!! (கட்டுரை)