மிருதுவான முகத்திற்கு….!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 2 Second

1. கடலை மாவுடன் சிறிது மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடு நீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

2. ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

3. பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக்கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். பூசணிக் காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

4. பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

5. புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடு நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

6. தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும். தயிருடன் கடலைமாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

7. உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ்வாட்டர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தடவலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சருமத்திற்கு மென்மை, குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்!! (மகளிர் பக்கம்)
Next post வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்…!! (மருத்துவம்)