இருபது நிமிட சிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 54 Second

மன அழுத்தப் பிரச்னைகளால் ஒட்டுமொத்த உலகமுமே செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. எத்தனையோ நவீன மாத்திரைகளும், சிகிச்சைகளும் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளை எல்லாம் தாண்டி இயற்கையிடமே எல்லாவற்றுக்கும் இருக்கிறது தீர்வு என்பதை உரத்து சொல்லியிருக்கிறது Frontiers in Psychology இதழில் வெளியாகியிருக்கும் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை. ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்கள் வரை இயற்கையோடு இணைந்திருப்பது, உங்கள் மன அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கும் என்றும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இயற்கையோடு இயைந்திருக்கும் கணங்களின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வை வழங்குவதற்காக, 36 நகர்ப்புறவாசிகள் இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கு இயற்கை மாத்திரை(Nature pill) என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்கள் வரை இயற்கை சூழலோடு இணைந்திருப்பதையே இயற்கை மாத்திரை எடுத்துக் கொள்வதென்று சொல்லப்படுகிறது. ஒரு வாரத்திற்கு குறைந்தது 3 முறை வீதம் 8 வார காலத்திற்கு இந்த 36 பேரும் இயற்கை மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த பங்கேற்பாளர்கள் இயற்கை மாத்திரையை எடுத்துக் கொள்வதற்கான காலநேரம், இடம், நாள் ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் நேரம் பகல் நேரமாக இருக்க வேண்டும். மேலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சமூக ஊடகங்கள், இணையம், தொலைபேசி அழைப்புகள், உரையாடல்கள் மற்றும் வாசிப்பு ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த 36 பங்கேற்பாளர்களிடமும் ஒரு இயற்கை மாத்திரைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட உமிழ்நீர் மாதிரிகளிலிருந்து கார்டிசோல்(Cortisol) என்கிற மன அழுத்த ஹார்மோனின் அளவை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அளவிட்டனர். இயற்கையான உணர்வைத் தரும் ஓர் இடத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பது அல்லது நடந்து செல்வதன் மூலம் கார்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோன் அளவு குறைவதை ஆராய்ச்சிப்பூர்வமாகவே உறுதிப்படுத்தினர். இந்த 30 நிமிட இயற்கை அனுபவத்திற்குப் பிறகு கார்டிசோலின் அளவு மெதுவான விகிதத்தில் தொடர்ந்து குறைந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறியதைப் போன்றே, பங்கேற்பாளர்களும் தங்களுக்குள் ஏற்பட்ட இனிய உணர்வுகள், அமைதி பற்றி
ஆராய்ச்சியாளர்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டனர். எனவே, இனிமேல் மனக்கஷ்டம் என்று தோன்றினால் இயற்கையான இடங்களுக்கு ‘20 minutes visit’ அடித்துப் பாருங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேனிட்டி பாக்ஸ்: சிவப்பழகு!! (மகளிர் பக்கம்)
Next post இதை பார்த்தால் யோசிக்காமல் ஓடிவிடுங்கள்!! (வீடியோ)