கெமிக்கல் சிகிச்சை செய்த கூந்தலை மாற்ற முடியுமா? (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 26 Second

என்னுடைய டீன் ஏஜில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு அடிக்கடி கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், ஸ்மூத்தனிங் என நிறைய கெமிக்கல் சிகிச்சைகளை செய்து கொண்டிருக்கிறேன். இப்போது என் கூந்தல் தேங்காய் நார் போல மிகவும் பாதிக்கப்பட்டுக் காணப்படுகிறது. என் கூந்தலை பழைய நிலைக்குக் கொண்டு வர முடியுமா?

அழகுக்கலை நிபுணர் விஜி கே.என்.ஆர்.

கெமிக்கல் சிகிச்சை செய்த கூந்தலை ஒரே நாள் இரவில் பழைய நிலைக்கு மாற்றிவிட முடியாது. புதிதாக வளரும் முடியை ஆரோக்கியமாக வளரச் செய்யலாம். ஏற்கனவே உள்ள முடியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம்.உங்களுக்கு உடனடியாகத் தேவை ஸ்பா சிகிச்சை. பார்லர்களில் செய்யப்படுகிற ஹேர் ஸ்பா சிகிச்சைகளின் மூலம் உங்கள் மோசமான கூந்தலை சரி செய்யலாம். குறைந்தது 5 சிட்டிங் தேவைப்படும். வாரம் ஒருமுறை செய்து கொள்வது நல்லது. இது கூந்தல் உதிர்வையும் நிறுத்தும்.

நம்பகமான பார்லர்களில் கூந்தலுக்கான கெராட்டின் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்கள் கூந்தலை மிருதுவாக்கும்.
கறிவேப்பிலை சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயை மிதமான சூடாக்கி, கூந்தலுக்கு மசாஜ் செய்து குளிக்கலாம்.

250 கிராம் கறிவேப்பிலை, 8 பல் பூண்டு, 8 டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். தினமும் இதில் 1 டீஸ்பூன் அளவை வெந்நீருடன் சாப்பிடவும். 3 மாதங்களுக்குச் செய்து வர, கூந்தல் வளர்ச்சி அதிகமாகும். கூடவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுகிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்க்கையை வசீகரமாக்கும் வெந்தயமும் ஒரு வயகராதான்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆயில் மசாஜ் செய்தால்தான் முடி வளருமா? (மகளிர் பக்கம்)