மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 28 Second

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது.மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?
‘செக்ஸி’யாக உணருங்கள்

சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப்பில்லாதவராகவும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷ யங்களைச் செய்யுங்கள். அழகுநìலை யம் சென்று கால் ரோமங்களை `வேக்ஸ்’ செய்து நீக்குங்கள். கூந்த லில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.

‘சுவிட்சுகளை’ அறியுங்கள்

உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உடம்பை நேசியுங்கள்

கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கை யுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மெலிதான சுருக்கம் காட்டும் தோல், இடுப்பில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலியல் சிந்தனை பொங்கட்டும்.

படுக்கையறைத் திறமை

படுக்கையறையில் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள்

சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள்.வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.

பரிசோதனை முயற்சியில் ஈடுபடுங்கள்

படுக்கையில் ‘அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.

முதல் முயற்சியை மேற்கொள்ளுங்கள்

சும்மா ‘தேமே’ என்று இருக்காதீர்கள். உங்களவரே செயல்படட்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். செயல்பாட்டில் முதல் ஆர்வம் காட்டுங்கள்.

புதிய இடம் செல்லுங்கள்

மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், கலவி விளையாட்டிலும் வெளிப்படும்.
பார்ட்டி, விருந்து கவனம்

பார்ட்டி டின்னர்’, விருந்து என்று இரவில் சென்று ஒரு வெட்டு’ வெட்டிவிட்டு வந்தால் அது மந்தத்தன்மையைத் தரும். தூக்கம் கண்களை அரவணைக்கும். எனவே இரவில் ‘சுறுசுறுப்பாக’ இருக்க வேண்டுமë என்று நினைத்தால் நாவுக்குக் கடிவாளம் போடுங்கள்.

சுவாரசியம் கூட்டுங்கள்

உங்களின் செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். படுக்கையறை உறவு வெறும் சடங்காக மாறிவருவதை நீங்கள் உணரும் நிலையில், அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அப்படி என்னதான் நடக்கிறது இங்கே? ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம்! (வீடியோ)