வேனிட்டி பாக்ஸ்: சன் ஸ்கிரீன்!! (மகளிர் பக்கம்)
மழையிலும் குளிரிலும் வெயிலுக்கு ஏங்கியவர்கள் எல்லாம் இப்போது வெயிலைப் பழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காலை வெயில் நல்லது என்கிறார்கள். ஆனாலும், காலை 9 மணிக்கே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. 5 நிமிடங்கள் வெயிலில் சென்றாலேதலை முதல் பாதம் வரை கருத்துவிடுகிறது.
வீட்டை விட்டு வெயிலில் வெளியே சென்றால் மட்டுமல்ல… வெயில் காலங்களில் வீட்டுக்குள் இருக்கும் போதுகூட சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார் அழகுக் கலை நிபுணர் மேனகா.அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அழகு சாதனமாக மாறிவிட்ட சன் ஸ்கிரீன் குறித்த தகவல்களை விளக்கமாகச் சொல்கிறார் அவர்.
சன் ஸ்கிரீன் என்றால் என்ன?
சன் ஸ்கிரீன், சன் பிளாக், சன் டான் லோஷன், சன்பர்ன் கிரீம், சன் கிரீம், பிளாக் அவுட்… எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். எல்லாமே ஒன்றுதான். இவை எல்லாமே சூரியனின் கடுமையான பாதிப்புகளில் இருந்து சருமத்தைக் காப்பவை. சூரிய வெளிச்சம் பட்டு சருமம் கருத்துப் போவது, வயதுக்கு முந்தைய முதுமை, சருமச் சுருக்கங்கள் போன்றவை வராமல் தடுக்கக்கூடியவை. சன் ஸ்கிரீனில் உள்ள பிரதானப் பொருளானது, சூரியனின் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொண்டு, அது சருமத்தின் ஆழத்தில் உள்ள லேயர்கள் வரை ஊடுருவுவதைத் தடுக்கிறது அல்லது அந்தக் கதிர்களின் தாக்கம் சருமத்தைபாதிக்காமல் காக்கிறது.
சன் ஸ்கிரீன் உபயோகிக்கிற காரணத்தினால், எந்தக் கவலையும் இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெயிலில் நிற்கலாம் என அர்த்தமில்லை. சன் ஸ்கிரீன் என்பது சூரியனின் எல்லா கதிர்களில் இருந்தும் சருமத்துக்குப் பாதுகாப்பு அளிக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.கிரீம், லோஷன், ஜெல், ஸ்டிக், ஸ்பிரே என பல வடிவங்களில் சன் ஸ்கிரீன் கிடைக்கிறது.
அதென்ன எஸ்.பி.எஃப்?
எல்லா சன் ஸ்கிரீன்களிலும் எஸ்.பி.எஃப் (SPF – Sun Protection Factor) என ஒரு எண் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட அந்த சன் ஸ்கிரீனுக்கு எந்தளவுக்கு சூரியனின் பாதிப்புள்ள கதிர்களின் வீரியத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதற்கான குறியீடுதான் அது.வெயிலில் சென்ற பத்தாவது நிமிடத்தில் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றால், எஸ்.பி.எஃப்.15 உள்ள சன் ஸ்கிரீன் உங்களுக்கு 150 நிமிடங்களுக்கு பாதுகாப்பு தரும். அதாவது, 10X15. இது தோராயமான ஒரு கணக்குதான்.
நீங்கள் வெயிலில் செலவிடப் போகிற நேரத்தைப் பொறுத்து அதிக அளவு எஸ்.பி.எஃப். உள்ள சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தவிர, இது ஒருவரது சருமத்தின் தன்மை, வெயிலின் கடுமை, உபயோகிக்கிற சன்ஸ்கிரீனின் அளவு என பல விஷயங்களைப் பொறுத்து மாறும்.எஸ்.பி.எஃப். 75, 100 என்றெல்லாம் கிடைக்கிற சன் ஸ்கிரீன் சருமத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பைக் கொடுக்கும் என்பது சிலரது நம்பிக்கை. அதிக அளவு எஸ்.பி.எஃப். கொண்ட சன் ஸ்கிரீன், UVB கதிர்களிடம் இருந்துதான் அதிகமாகப் பாதுகாக்கும். UVA கதிர்களிடமிருந்தும் சருமம்
பாதுகாக்கப்பட வேண்டும்.
எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் எல்லாருக்கும் ஏற்றது. அதை வெயில் நேரடியாகப் படுகிற எல்லா
பகுதிகளிலும் தடவிக் கொள்வதுடன், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறையும் மறுபடி தடவ வேண்டும் என்பதே பொதுவான அறிவுரை.
எப்படித் தேர்ந்தெடுப்பது?
அழகுசாதனங்கள் விற்பனையாகிற கடைகளிலும் சரி, மருந்துக் கடைகளிலும் சரி ஏதேதோ பிராண்டு
களில் விதம் விதமான சன் ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கான சன் ஸ்கிரீன் எது என்பதைக் கீழ்க்கண்ட விஷயங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
உங்கள் சருமத்துக்கு எது பொருந்துகிறது?
உபயோகிக்க எளிதாகவும் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட இடைவெளிகளில் உபயோகிக்க வசதியானதாகவும் இருக்கிறதா? வெயிலில் உங்களுடைய நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை? (நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது போன்று…)
முகத்துக்கு மட்டுமா? உடலுக்கும் சேர்த்தா?எந்த சருமத்துக்கு எப்படிப்பட்ட சன் ஸ்கிரீன்?
சென்சிட்டிவ் சருமத்துக்கு…
PABA (para-aminobenzoic acid) ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருக்கிற சன் ஸ்கிரீனே சிறந்தது. ஆயில் ஃப்ரீயாகவும் வாசனைகள் அற்றதாகவும், ஹைப்போஅலர்ஜெனிக் என குறிப்பிடப்பட்டதாகவும், கெமிக்கல் கலக்காததாகவும் இருக்க வேண்டும்.
பருக்கள் இருந்தால்…
ஆயில் ஃப்ரீ சன் ஸ்கிரீன் லோஷன் என்றால் சருமத் துவாரங்களை அடைக்காமலும் பருக்களை அதிகப்படுத்தாமலும் இருக்கும். Non-comedogenic என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அப்படிஎன்றால் சரும துவாரங்களை அடைக்காது என அர்த்தம்.
எண்ணெய் பசை சருமத்துக்கு…
வாட்டர் அல்லது ஜெல் based சன் ஸ்கிரீன்களே சிறந்தவை. ஆயில் ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருக்கிறதா என கவனிக்க வேண்டும்.
வறண்ட சருமத்துக்கு…
கிளிசரின் மற்றும் கற்றாழை கலந்தவற்றை உபயோகிக்கலாம். ஆல்கஹால் கலந்த ஸ்பிரே மற்றும் ஜெல் வகைகளைத் தவிர்க்கவும்.
எப்படி உபயோகிப்பது?
முகத்துக்கு உபயோகிக்கிற அதே சன் ஸ்கிரீனை உடலுக்கும் உபயோகிக்கக் கூடாது.
பருக்களுக்கு பிரத்யேக கிரீம் உபயோகிக்கிறவர் என்றால் அதை முதலில் தடவிக் கொண்டு, 20 நிமிடங்கள் கழித்தே சன் ஸ்கிரீன்உபயோகிக்க வேண்டும்.
தூங்கச் செல்வதற்கு முன் முகத்திலுள்ள சன் ஸ்கிரீனை அகற்றி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். சன் ஸ்கிரீன் கவரில் உள்ள குறிப்புகளைப் படித்து அதன்படி உபயோகிக்கவும். வெயிலில் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே சன் ஸ்கிரீன் தடவப்பட வேண்டும். ஸ்பிரே வடிவிலான சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் போது கவனம் தேவை. அருகில் புகையோ, நெருப்போ இருக்கக்கூடாது.
* சன் ஸ்கிரீனை கண்களில்படாமல் உபயோகிக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சன் ஸ்கிரீனில் உள்ள எந்த மாதிரியான கெமிக்கல்கள் ஆபத்தானவை? இயற்கையான சன் ஸ்கிரீன் இருக்கின்றனவா?
Average Rating