மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 42 Second

முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவற்றால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒமேகா கொழுப்பு அமிலம் :

மீன்களில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

வயதான பெண்களுக்கு :

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது. குறைவாக ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்திருக்கிறது.

இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்களை நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனை தரும். கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிக்கிறது. மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளன.

மாத்திரைகள் உதவாத போது?

ஆரம்ப நிலை நீரிழிவை உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகளின் மூலமே கட்டுப்படுத்தி விடலாம். சர்க்கரை அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டி வரும். இன்சுலின் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், அது தொடர் கதையாகி விடும் என பரவலான நம்பிக்கை ஒன்று உண்டு. இது தவறு. சர்க்கரை அளவு தாறுமாறாக எகிறும் போது சிலருக்கு சில வாரங்களுக்கு இன்சுலின் ஊசி போட்டு, கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, பிறகு மருத்துவர் ஆலோசனை பெற்று, மறுபடி மாத்திரைகளை தொடரலாம்.

இன்சுலின் பல வகைகள் உள்ளன. ஷார்ட் ஆக்டிங் இன்சுலின் என்பது 4 முதல் 6 மணி நேரம் வரை பலனளிக்கும். இதை உணவுக்கு முன் போட்டுக்கொள்ள வேண்டும். லாங் ஆக்டிங் இன்சுலின் என்பது 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்துக்குப் பலனளிக்கும். நோயாளிகளின் உடல்நிலை மற்றும் பாதிப்பின் அளவை பொருத்து நாளொன்றுக்கு 1 முதல் 4 இன்சுலின் ஊசிகள் வரை தேவைப்படலாம்.

மாத்திரைகளை ஆரம்பித்த பிறகு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை, முறையான மருத்துவ பரிசோதனை முக்கியம். ரத்த சர்க்கரை அளவுக்கான சோதனையும், ரத்த அழுத்தத்துக்கான சோதனையும் செய்து பார்க்க வேண்டும். ரத்த சர்க்கரைக்கான சோதனையை எப்போதும் மாத்திரையை சாப்பிட்ட பிறகே எடுக்க வேண்டும். இவை தவிர, பி.பி மற்றும் கொலஸ்ட்ராலுக்கான சோதனைகளும் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொப்பை இருந்தால் மாரடைப்பு? (மருத்துவம்)
Next post ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள்!! (மகளிர் பக்கம்)