புதிய கொரோனா பெருந்தொற்று ஆபத்தானது – 350 விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! (கட்டுரை)

Read Time:3 Minute, 51 Second

உருமாற்றமடைந்த புதிய கொரோனா பெருந்தொற்று ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா முழுவதும் ஒருங்கிணைந்த ஊரடங்கை மிக விரைவில் அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை சுவிஸ் விஞ்ஞானி உள்ளிட்ட 350 பேர் முன்வைத்துள்ளனர். சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா தொற்றை விடவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது பிரித்தானியாவில் உருமாற்றமடைந்த புதிய கொரோனா தொற்று.

இந்த நிலையில் புதிய கொரோனா தொற்றின் ஆபத்து சதவீதத்தை கணக்கில் கொண்டு, ஜெனீவா வைராலஜிஸ்ட் இசபெல்லா எக்கர்லே உள்ளிட்ட 350 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இதுவரையான ஆய்வுகளின் அடிப்படையில், உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா தொற்று எந்த அளவுக்கு நீடிக்கும் அல்லது மேலும் உருமாறும் வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் கணிக்க முடியாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ள இசபெல்லா எக்கர்லே,

இன்னும் அது ஆபத்தானதாகவே மாற அதிக வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.மட்டுமின்றி, முந்தையை தொற்றைவிடவும், புதிய கொரோனா அதிக மரண எண்ணிக்கையை கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஐரோப்பா முழுவதும் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்திற்கு எட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் இசபெல்லா எக்கர்லே.

அடுத்த சில மாதங்களை நாம் கடந்து செல்ல வேண்டும் என்றால், அனைத்து ஐரோப்பா நாடுகளும் உடனடியாக ஒருங்கிணைய வேண்டும் என்றார்.மேலும், அனைத்து நாடுகளும் ஒரே திட்டத்தை அமுலுக்கும் கொண்டு வர வேண்டும். இதனால் கொரோனா மேலும் உருமாறாமல் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.இதன் முதல் கட்டமாக, ஐரோப்பா முழுவதும் ஒரே நாளில் ஊரடங்கை அறிவித்து அமுலுக்கு கொண்டுவர வேண்டும்.

இந்த முக்கிய கோரிக்கையை சுவிஸில் இருந்து இசபெல்லா எக்கர்லே உள்ளிட்ட 9 விஞ்ஞானிகள் உட்பட ஐரோப்பா முழுவதும் உள்ள சுமார் 350 விஞ்ஞானிகள் தற்போது முன்வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சபதத்தை நிறைவேற்ற காத்திருக்கும் சசிகலா!! (வீடியோ)
Next post தேசிய கீதத்தை மாற்றிய நாடு…. !! (உலக செய்தி)