மினி உலக கோப்பை தகுதி சுற்று போட்டி: இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை

Read Time:4 Minute, 32 Second

Cricket,1.jpg8 நாடுகள் பங்கேற்கும் 5-வது மினி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை) நாளை (15-ந் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. மொகாலி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய இடங்களில் இந்த போட்டி நடக்கிறது. இதில்ஆட இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நிïசிலாந்து ஆகிய 6 அணிகள் தர வரிசை அடிப்படையில் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. `ஏ’ பிரிவில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகளும், `பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நிïசிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் இரண்டு அணிகள் தகுதி சுற்று ஆட்டங்களின் மூலம் இந்த போட்டியில் பங்கேற்கிறது. முதல் 4 தகுதி சுற்று லீக் ஆட்டங்கள் முடிவில் தலா 2 வெற்றிகள் பெற்ற இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பிரதான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றன. தொடர்ந்து தலா 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட ஜிம்பாப்வே, வங்காளதேச அணிகள் தகுதி இழந்தன.

இந்த நிலையில் தகுதி சுற்றின் கடைசி லீக் ஆட்டம் மும்பையில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவு போட்டியில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில் இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு பிரதான ஆட்டத்துக்கு தகுதி பெற்று விட்டன.

இருப்பினும் இன்று நடக்கும் இந்த கடைசி தகுதி சுற்று லீக் ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் வெற்றி பெறும் அணி பிரதான ஆட்டத்தில் `பி’ பிரிவில் இடம் பிடிக்கும். தோல்வி காணும் அணி `ஏ’ பிரிவில் இடம் பெறும்.

`ஏ’ பிரிவில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இந்தியா ஆகிய வலுவான அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்றால் கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

சமீப காலங்களில் இலங்கை அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அணி ஆசிய கண்டத்தை சேர்ந்த அணி என்பதால் பிட்ச் அனுகூலமாக இருக்ககூடும். அந்த அணியின் இளம் வீரர் தாரங்கா தகுதி ஆட்டங்களில் சிறப்பாக ஆடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் லாரா கடைசி தகுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடிப்பதே தங்கள் குறிக்கோள் என்று கூறியுள்ளார். அந்த அணி வீரர் கெய்ல் ஆட்டம் அசத்தலாக இருக்கிறது. எனவே இந்த ஆட்டம் பிரதான ஆட்டத்துக்கு இணையாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இன்றைய ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி செட் மேக்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மேலாடை அணியாமல் போராட்டம் நடத்த பெண்களுக்கு உரிமை உண்டு
Next post பேக்கரி கடைக்குள் புகுந்த ரஷிய அதிபர் புதின் -காசு கொடுத்து காபி வாங்கி குடித்தார்