கூந்தல்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 12 Second

ஸ்பா… அழகு சிகிச்சைகளில் இந்த வார்த்தை சமீபகாலமாக ரொம்பப் பிரபலம். தலை முதல் கால் வரை அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஸ்பாவில் தீர்வு உண்டு என்கிறார்கள். அதென்ன ஸ்பா? ‘ஸ்பா’ என்பது மினரல் நிறைந்த தண்ணீர் கொண்டு நம் சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்தித் தருகிற ஒரு சிகிச்சை. ‘பாடி ஸ்பா’, ‘ஹேர் ஸ்பா’ என்று நம் உடலின் ஒவ்வொரு பாகங்களை மட்டும் கவனத்தில் கொண்டு ‘ஸ்பா’ செய்யப்படுகிறது. அவற்றில் கூந்தல் பிரச்னைகளுக்காக செய்யப்படுகிற ஸ்பா சற்றே ஸ்பெஷல்! கூந்தல் தொடர்பான ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு ஸ்பா இருக்கிறது.

பொடுகுத் தொல்லைக்கு…

நன்கு அடித்த கிரீம் பதத்தில் இருக்கும் தயிருடன் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், ஒரு டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, கலந்து முடியில் தடவுங்கள். மண்டைப்பகுதியை தனித்தனி பிரிவுகளாக பிரித்துத் தடவுவது நல்லது. பின் ஷவர் கேப் கொண்டு தலையை கவர் செய்ய வேண்டும். இது தலையில் இருக்கும் துவாரங்களை திறக்கச் செய்து, தடவியிருக்கும் கலவையில் உள்ள பொருட்களை நேராக உள்ளே செலுத்தும். அரைமணி நேரம் கழித்து தண்ணீரால் தலையை அலச வேண்டும்.

வறண்ட முடிக்கு…

நல்ல பழுத்த அவகேடோ பழத்தை ஸ்மூத்தீ போல அரைத்து வைத்துக் கொள்ளவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரை 3 டீஸ்பூன், 10 மி.லி கிளிசரின், தேன் 10 மி.லி, 2 அல்லது 3 முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலக்கவும். 2 முதல் 3 மணிநேரம் வரை இதை அப்படியே வைக்கவும். பின், கூந்தலை பகுதிகளாகப் பிரித்துத் தடவி, தலையை ஷவர் கேப்பால் மூடி ஸ்டீம் செய்யுங்கள். அதன் பின் தலையை அலசவும்.

செம்பட்டை முடிக்கு…

கெட்டியான தேங்காய் பால் 1 கப் எடுத்துக் கொள்ளவும். செம்பருத்திப் பூ, ஊற வைத்த வெந்தயம், கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி எல்லாவற்றையும் விழுதாக அரைத்து, தேங்காய் பாலில் கலக்கவும். 30 மி.லி. விளக்கெண்ணெயில், ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூல் பத்து உடைத்துப் போட்டு கலவையை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதைத் தலையில் தடவி 2 மணி நேரம் நன்கு ஊறி, மைல்டான ஷாம்பு மற்றும் குளிர்ந்த தண்ணீர் உபயோகித்து அலசவும். வாரம் 2 முறை இப்படிச் செய்து வர, செம்பட்டை மாறும்.

கூந்தல் உடைவதற்கு…

பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன் மூன்றும் தலா 30 மி.லி எடுத்துக் கொள்ளவும். நீலி அவுரி இலைப்பொடி, கீழாநெல்லிப் பொடி இரண்டும் தலா 50 கிராம், பனைவெல்லம் சிறிது எடுத்து எண்ணெய் கலவையில் கலக்கவும். இதை முடியில் தடவி, கூந்தலுக்கு ஸ்டீம் செய்யவும். 2 மணி நேரம் கழித்து கூந்தலை அலசவும். கூந்தல் அளவுக்கதிமாக வறண்டு போவதால்தான் உடைந்து உதிர்கிறது. அந்தப் பிரச்னையை இந்த ஸ்பா சிகிச்சை சரியாக்கும்.

பேன், ஈறு பிரச்னைகளுக்கு…

200 கிராம் சம்பங்கி விதையை மிக்சியில் பொடிக்கவும். அதை 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் கலந்து குறைந்த தணலில் வைத்துக் காய்ச்சி, 15 நாட்
களுக்கு அப்படியே மூடி வைக்கவும். எண்ணெய் நன்கு தெளிந்ததும், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் 3 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் 1 டீஸ்பூன் துளசிப் பொடி, 1 டீஸ்பூன் வசம்புப் பொடி இரண்டும் கலந்து, தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து அலசவும். பிறகு முள்ளங்கிச் சாறும் ஆப்பிள் சிடர் வினிகரும் கலந்த கலவையில் பஞ்சை நனைத்து, கூந்தலைப் பகுதிகளாகப் பிரித்துத் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெறுமனே அலசவும். முதல் சிகிச்சையில் பேன்கள் மறையும் என்றால் இந்த சிகிச்சையில் ஈறுகளும் முற்றிலுமாக அழியும். குறிப்பாக பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகளுக்கு இந்த ஸ்பா பெரியளவில் உதவும்.

கூந்தல் உதிர்வுக்கு…

கூந்தல் உதிர்வுக்கான காரணம் முதலில் கண்டுபிடிக்கப்பட வேண்டும். பிறகே அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கலந்து, டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கவும். அதைத் தலையில் தடவி 2 மணி நேரம் ஊறி அலசவும். அடுத்த நாள் 2 முட்டையின் வெள்ளைக் கருவில், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் வெந்தயத் தூள், 1 டீஸ்பூன் நீலி அவுரிப் பொடி, 1 டீஸ்பூன் கடுக்காய் பொடி, 1 டீஸ்பூன் பொடுதலைப் பொடி ஆகிய எல்லாவற்றையும் கலக்கவும். கூடவே 20 சொட்டு லேவண்டர் ஆயில் மற்றும் ரோஸ்மெர்ரி ஆயிலும் கலந்து, 3 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு அதைத் தலையில் தடவி, 1 மணி நேரம் கழித்து அலசவும். இந்த ஸ்பா தற்காலிகமாக கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தும். கூந்தல் உதிர்வுக்கான சரியான காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொண்டு, கூடவே இந்த சிகிச்சையையும் மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

ஆரோக்கியமான கூந்தலுக்கு என்னென்ன சாப்பிடலாம்?

உணவு சரியாக இருந்தால், அது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். அடிக்கடி ஜங்க் உணவுகளை சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது, போன்ற பழக்கங்கள தலைமுடியில் பாதிப்பை ஏற்படுத்தும். உலர் பழங்கள், வால்நட், பாதாம், முளைவிட்ட பயறு போன்ற வற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் கூந்தலுக்கு அவசியமான ஊட்டங்களை உள் வழியே கொடுத்து ஆரோக்கியமாக்கும்.

வீட்டிலேயே தலையை ஸ்டீம் செய்ய:

நல்ல சூடான தண்ணீரில் டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, அந்த சூட்டோடு தலையைச் சுற்றி டர்பன் போல கட்டவும். அந்த சூடு இறங்கியதும் இதே போல மறுபடியும் செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மருதாணியில் அழகும் ஆரோக்கியமும்!! (மகளிர் பக்கம்)