சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் நிதி உதவி- அமெரிக்கா!! (கட்டுரை)

Read Time:2 Minute, 44 Second

சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மாத்திரமே இலங்கைக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையை அமெரிக்கா விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டல் மாத்திரமே நிதி உதவி வழங்கப்படும் என அந்தச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை தனது மனித உரிமை நிலவரத்தில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும், இலங்கை மதங்களுக்கு இடையிலான உறவு மற்றும் நல்லிணக்கத்தில் முன்னேற்றகரமான நிலையை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை வலியுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் உறுதி செய்தால் மாத்திரமே இலங்கைக்கு எதிர்காலத்தில் நிதியுதவி வழங்கப்படும் என அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இன மற்றும் மதக்குழுக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்,ஆட்சி முறையில் வெளிப்படைதன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிக்க வேண்டும்,இலங்கை மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அவர்களின் மத மற்றும் இன நம்பிக்கைகளை எதுவாகயிருந்தாலும் மதிக்க வேண்டும்.உறுதி செய்ய வேண்டும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும என அந்தச் சட்டமூலம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லேட்டஸ்ட் பேஸ்மேக்கர்!! (மருத்துவம்)
Next post அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!!! (அவ்வப்போது கிளாமர்)