உங்களால் தொட முடியுமா?!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 24 Second

இதயமே… இதயமே…

நோய் வந்துவிட்டால் அறிகுறிகள் தெரிகின்றன… அதை உணர்கிறோம்… சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறோம்… சரி, ஆரோக்கியமாக இருக்கும்போது அதை உணர முடியாதா? குறிப்பாக, இதயத்தின் இயக்கத்தை? இப்படி வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியிருக்கிறார்கள் ஜப்பானின் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தினர். அதில் சுவாரஸ்யமான சில உண்மைகளும் தெரிய வந்திருக்கிறது. மார்பக எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., சி.டி.ஸ்கேன் என்று இதயத்தைப் பரிசோதிப்பதற்கென சில முறைகள் இருக்கின்றன. ஆனால், செலவில்லாமல் எளிமையாகவே நம் இதயத்தைப் புரிந்துகொள்ள ஒரு வழி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படி என்ன அது என்கிறீர்களா?

தரையில் கால்களையும் கைகளையும் நன்றாக நீட்டி அமருங்கள். அப்படியே முதுகை வளைத்து உங்கள் கைகளால் காலின் விரல்களைத் தொடுங்கள். குறிப்பாக, கட்டைவிரலை… உங்களால் கால் விரல்களை சிரமமின்றித் தொட முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமான இதயத்துடன் இருப்பதாக அர்த்தம். இதை இன்னொரு முறையிலும் சோதித்துக் கொள்ளலாம். நிமிர்ந்து நின்ற நிலையிலிருந்து குனிந்து பாதங்களின் விரல்களைத் தொட வேண்டும். கால்களை மடக்கவோ, வளைக்கவோ கூடாது. கொஞ்சம் வலி இருக்கும்தான். அப்படி வளைந்து காலின் கட்டை விரலைத் தொட முடிந்தாலும் நீங்கள் ஆரோக்கியமானவர்தான். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணம் சிம்பிள்…

‘உடலின் நெகிழ்வுத் தன்மைக்கும் இதயநலனுக்கும் தொடர்பு உண்டு. முக்கியமாக இதயத்தின் தசைகளோடும், ரத்த நாளங்களோடும் கால் விரல்கள் நெருங்கிய தொடர்புடையவை. 20 வயது முதல் 83 வயது வரையுள்ள 526 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில் பெரும்பாலானவர்களிடம் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இருப்பினும், இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது’’ என்பதையும் குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள்.

இன்னொரு விஷயம்…

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கும் தரையில் அமர்ந்து கால்விரல்களைத் தொடும் முறையை யோகாசனத்தில் பஸ்சிமோத்தாசனம் என்று இந்தியர்கள் செய்து வருகிறார்கள். நின்றபடியே கால்விரல்களைத் தொடுவது உத்தனாசனம் என்பதும் நினைவுகொள்ளத்தக்க தகவல்! சரக்கு நம்முடையதுதான்… பேக்கிங் மட்டும் வெளிநாடு!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுர் வேதமும் அழகும்!! (மருத்துவம்)
Next post லேட்டஸ்ட் பேஸ்மேக்கர்!! (மருத்துவம்)