பொடுகு பிரச்னையை தீர்க்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 54 Second

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டிலிருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பொடுகு பிரச்னைக்கு தீர்வு காணலாம். வெப்பாலை, அரைக்கீரை விதை, எலுமிச்சை, தயிர் போன்றவை பொடுகு பிரச்னைக்கு மருந்தாகிறது. வெப்பாலை மர இலைகளை பயன்படுத்தி பொடுகுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெப்பாலை இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதில், வெப்பாலை இலைகளை துண்டுகளாக்கி போடவும். இதன்மேல் மெல்லிய துணியை கட்டி, 3 நாட்கள் வெயிலில் வைக்கவும். இலைசாறு எண்ணெயில் இறங்கி சிவப்பு நிறமாக தைலமாக மாறும். இதை வடிகட்டி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தினமும் தலைக்கு தேய்த்து வரும்போது பொடுகு இல்லாமல் போகும்.

மேலும், வெப்பாலை இலைகளை நீர்விடாமல் பொடியாக அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிக்கட்டி பயன்படுத்தலாம். சாலையோரம், மலை பகுதிகளில் வெப்பாலை கிடைக்கும். இதன் இலைகளை பறிக்கும்போது பால் சுரக்கும். இது மருக்களுக்கு மேல்பூச்சாக பயன்படுகிறது. பொடுகு இருந்தால் தலையில் மாவுபோன்று காணப்படும். இது கழுத்து பகுதியில் உதிர்ந்து அரிப்பை ஏற்படுத்தும். சொரியாசிஸ் நோய்க்கு காரணமாக அமைகிறது. பூஞ்சை காளான்களின் பாதிப்பால் சொரியாசிஸ் ஏற்படுகிறது.

அரைக்கீரை விதையை பயன்படுத்தி பொடுகு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், எலுமிச்சை, அரைக்கீரை விதை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் 50 மில்லி நல்லெண்ணெயில், பாதி எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் அரைக்கீரை விதை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுத்து வைக்கவும். இதை தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை போகும்.

அரைக்கீரை ஆரோக்கியம் தரக்கூடியது. இதை அடிக்கடி உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பலம் தரும். இரும்புசத்தை உள்ளடக்கியது. ஈரலுக்கு பலத்தை கொடுக்கும் இது பசியை தூண்டுகிறது. பொடுகினால் முடி உதிர்கிறது. சொரியாசிஸ் பிரச்னைக்கு பொடுகு தொடக்கமாக அமைகிறது. நெல்லி வற்றலை பயன்படுத்தி பொடுகு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லிவற்றல், தயிர், எலுமிச்சை.

செய்முறை: 2 ஸ்பூன் புளிப்பில்லாத தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது நெல்லிவற்றல் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு பிரச்னை விலகும். வாரம் ஒருமுறை குளித்துவர கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். முடி ஆரோக்கியமாக இருக்கும். பொடுகால் தலைமுடி உதிர்ந்து இளவயதில் வழுக்கை ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, வெப்பாலை, அரைக்கீரை விதை போன்றவற்றை பயன்படுத்தி பொடுகு பிரச்னைக்கு எளிதில் தீர்வுகாணலாம். தேமலை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். சாலையோரங்களில் காணப்படும் பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை காயவைத்து நெருப்பில் இட்டு கரியாக்கி எண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர தேமல் வெகுவிரைவில் விலகிப்போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆயுர் வேதமும் அழகும்!! (மருத்துவம்)