பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!! (மருத்துவம்)
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்தால் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிகிறது. முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய் இப்போது வயது வித்தியாசமின்றி இளைஞர்களையும் பலி வாங்குகிறது. இதய ரத்தக்குழாய் அடைப்பை எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும். அதற்கு இதோ சில டிப்ஸ்… எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள். இந்த பொருள் அனைத்துக்குமே ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது. உணவில் இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் அடைப்பு விலகிவிடும். ஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு ‘’ரஸவஷா ஸ்ரோதஸ்’’ என்று பெயர். இந்த ரத்த குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படும்.
புளிப்பு சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக்குழாய்களை சீராக இயங்க வைக்கும். ‘’புளிப்புக்காடி’’ என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச்சுவை கொண்டது. பூண்டு சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்’’ என்று பெயர். பூண்டு, கொழுப்பை குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். இஞ்சி, கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும் தன்மை இஞ்சிக்கும் உண்டு.
இவற்றை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்த கொழுப்பு குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த உணவுப்பொருள் உதவுகிறது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்க முடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating