கண் கருவளையத்தை போக்கும் மருத்துவ முறைகள்!! (மகளிர் பக்கம்)
நாகரீக வாழ்க்கையில் தூக்கத்தை தொலைப்பது, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் குறைபாடு, கல்லீரல் செயல்பாட்டில் உள்ள குறைபாடு, உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வது, வெயிலில் அதிகம் நேரம் இருப்பது, ரத்தசோகை போன்ற காரணங்களால் கண்களை சுற்றிலும் கருவளையம் ஏற்படுகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கண் கருவளையத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வெள்ளரியை பயன்படுத்தி கண் கருவளையத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி பசையாக எடுத்துக் கொள்ளவும். இதை கண்களுக்கு மேல் பூசி சுமார் 10 நிமிடம் வைத்திருந்து கழுவிவர கருவளையம் மறையும். கண்கள் குளிர்ச்சி அடையும். ரத்த ஓட்டம் சீராகிறது.
கருவளையத்தை போக்குவதில் வெள்ளரிக்காய் அற்புத மருந்தாக உள்ளது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது. மாதுளம் பழச்சாறு 48 நாட்கள் வரை குடித்துவர கண் கருவளையம் போகும். கண்கள் ஒளிபெறும். ரத்த சோகை சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளையில் விட்டமின் சி உள்ளது. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை கருவளையம் ஏற்பட காரணமாகிறது. எனவே, சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். குறைந்தது 6 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும்.
கண் கருவளையத்துக்கு தக்காளி நல்ல மருந்தாகிறது. நோய் தடுக்கும் மருந்தாக விளங்குகிறது. தக்காளியில் வைட்டமின் சி சத்து உள்ளது. புண்களை ஆற்றக் கூடியது. வீக்கத்தை வற்ற செய்கிறது. தக்காளியை சாப்பிடுவது ஆரோக்கியமானது. தக்காளியை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்திருந்தால் கண் எரிச்சல் சரியாகும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். கருவளையம் சரியாகும். உருளைக்கிழங்கை பயன்படுத்தி கண் கருவளையத்துக்கான மருந்து தயாரிக்கலாம். உருளைக்கிழங்கை சுத்தப்படுத்தி சதைப் பகுதியை பசையாக அரைத்து எடுக்கவும். மெல்லிய துணியில் பசையை வைத்து கண்களுக்கு மேல் வைத்திருந்தால், அதன் சாறு கண்களின் மீது படும். சுமார் அரைமணி நேரம் வைத்திருக்கலாம்.
இதனால் கருமை நிறம் மாறும். தீக்காயங்களால் ஏற்படும் கருமை நிறத்தை உருளைக்கிழங்கு சாறு மாற்றும். உருளைக்கிழங்கு அற்புதமான மருத்துவ குணங்களை உடையது. வலியை குறைக்க கூடியது. நோய் நீக்கியாக பயன் தருகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. கண்கருவளையத்தை சரிசெய்கிறது. உப்பை குறைப்பது, வெயிலில் அதிக நேரம் செல்லாமல் இருப்பது, சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவளையம் வராமல் தடுக்கலாம். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றுவை சரிசெய்யும் மருத்துவத்தை பார்க்கலாம். சிறு நெறிஞ்சில் செடியை ஒரு கைபிடி அளவுக்கு எடுத்து நீரில் காய்ச்சி இனிப்பு சேர்த்து குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று சரியாகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating