உடல் எடையைக் குறைக்கும் சோம்பு நீர்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 42 Second

உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க இது எவ்வாறு உதவுகிறது. அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் உடலை சுத்தப்படுத்த தேவைப்படும் மெட்டபாலிசம் எனும் வேதியியல் பரிமாற்றத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் சோம்பில் அதிக அளவில் உள்ளது. அதனால் சோம்பு தண்ணீர் பருகி உடல் எடையை குறைக்கலாம்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

பசியை அடக்கும், இரத்த சுத்தம்

அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம். சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

டாக்ஸின்களை வெளியேற்றும்

தற்போதைய காலத்தில் கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்களானது பல வழிகளில் உடலில் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

தூக்கத்தை சீராக்கி புத்துணர்ச்சியை வழங்கும்

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும். சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

சோம்பு தண்ணீர் செய்முறை

1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா? (மருத்துவம்)
Next post கூந்தலை பொலிவாக்க இயற்கை வழங்கும் இனிய ஷாம்பூகள்…!!! (மகளிர் பக்கம்)