கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தடுக்கும் மக்கள்!! (கட்டுரை)

Read Time:4 Minute, 19 Second

அட்டளுஹம பகுதி பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அட்டளுஹமவில் பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளிற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்து வருவதன் காரணமாகவும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்ற வருவதன் காரணமாகவும் பாரிய மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ்கொத்தணியொன்று உருவாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பொதுசுகாதார பரிசோதகரை அவமரியாதை செய்த – முகத்தில் துப்பிய சம்பவத்தினை தொடர்ந்து பொதுசுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கான தங்களது சேவையிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளா மகேஸ் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அட்டளுகம பகுதி மக்கள் விதிமுறைகளை மீறி கண்மூடித்தனமாக நடந்துகொள்வதால் பொதுசுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு செல்லமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது,கொழும்பை விட அங்கு நிலைமை மோசமாக உள்ளது பல நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலைiயிலும் பொதுமக்கள் நடமாடுகின்றனர்,வீடுகளில் இருந்து செல்லும் போது முகக்கவசங்களை அணிய மறுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த மத மற்றும் சமூகதலைவர்களும் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு சுகாதார பரிசோதகர்களிற்கு ஆதரவு வழங்கவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதியிலிருந்து பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,ஆனால் அப்பகுதி மக்கள் சுகாதார அதிகாரிகள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தடுக்கின்றனர் என அந்த பகுதியை சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனுமதி மறுக்கின்றனர் அவர்கள் தங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்க மறுக்கின்றனர் அவர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடமாடுவதால் ஏனைய பகுதிகளிற்கு நோய் பரவும் ஆபத்துள்ளது என சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர் என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அட்டளுகம மக்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் அதன் பின்னர் ஏற்படப்போகும் உயிரிழப்புகளிற்கு அவர்களே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முடக்கப்பட்டுள்ள நிலையில் கூட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தாங்கள் நினைத்ததை செய்கின்றனர்,எங்கள் உத்தியோகத்தர்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி வருகை ஆட்டத்தை மாற்றும் அண்ணாமலை பரபரப்பு பேட்டி!! (வீடியோ)
Next post பாதங்களை பாதுகாக்க சில டிப்ஸ்..!! (மகளிர் பக்கம்)