பள பள அழகு தரும் பப்பாளி! (மகளிர் பக்கம்)
அழகு குறிப்பு பள பள அழகு தரும் பப்பாளி! பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.
பளபளப்பான முகத்திற்கு
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.
மென்மையாக முகத்திற்கு
சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும். இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு. எப்படி என்கிறீர்களா? பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும்.
கருவளையம்
ஒரு சில பெண்களின் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட கருவளையம், மற்றும் கன்னத்தில் கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை தோன்றிய பகுதிகளை மாற்றி இயற்கை அழகை மெருகூட்டி வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? சோற்றுக்கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ்- ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து, இது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை இப்படி செய்து பாருங்கள். கருப்பு மாயமாகி இருப்பதை காண்பீர்கள்.
சிவப்பழகு
பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத்தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியது இதுதான்… கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.
வெண்பிஞ்சு பாதங்கள்
பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.
மென்னையான கூந்தல்
டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள். இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள். அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்: தேங்காய்க் கீற்று – 2 வெள்ளைமிளகு – 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.
Average Rating