கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை!! (கட்டுரை)
கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது.
இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.
மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் டபிந்துகலக்டிவ் 8000 நாட்கூலி தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் அனேகமானவர்கள் வடக்குகிழக்கின் கிராமப்பகுதிகளையும் மலையகத்தையும் சேர்ந்தவர்கள்.
அவர்கள் தங்கள் வீடுகளிற்கு சென்றுள்ளனர் தற்போது திரும்பி வரமுடியாத நிலையில் உள்ளனர்.
தொழிற்சாலைகளில் மூன்று வருட பணிக்காலத்தை பூர்த்தி செய்யாத தொழிலாளர்களை விலக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என தபிந்து கலக்டிவின் தலைவர் சமிலா துசாரி தெரிவிக்கின்றார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 25,000 பெண் தொழிலாளர்கள் உட்பட 39,000 தொழிலாளர்கள.; வேலைபார்க்கின்றனர்.
நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவேண்டும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளதன் காரணமாக தொழிற்சாலையின் முகாமைத்துவங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிற்கு கழிவறைகள் இணைக்கப்பட்ட அறைகளுடன் கூடிய தங்குமிட வசதிகளை செய்துகொடுத்துள்ள அதேவேளை ஏனைய நிறுவனங்கள் அவ்வாறான வசதிகளுடன் கூடிய அறைகளில் தொழிலாளர்கள் வாடகையை செலுத்தி தங்கவேண்டும் என தெரிவித்துள்ளன.
இது திருமணம் செய்த பெண் தொழிலாளர்களிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்களிற்கு மாத்திரம் நிறுவனம் தங்குமிடங்களை வழங்குவதன் காரணமாக திருமணம் செய்த தொழிலாளர்களும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்களும் விடுதிகளிற்கு வெளியிலேயே தங்கியுள்ளனர்.
நிறுவனங்கள் தற்போது அந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் தங்குமிடங்களில் உரிய கழிவறை வசதிகளை கொண்டிருக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை கேட்கின்றன – படங்களை கூட கேட்கின்றன, இதன் காரணமாக பல தொழிலாளர்கள் தங்கள் நண்பர்களின் வீடுகளின் படங்களை வழங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களால் என்ன செய்யமுடியும் அவர்கள் வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் பிடியில் உள்ளனர் என தெரிவிக்கும் துசாரி தனியான கழிவறைவசதிகளுடன் அறையொன்றை வாடகைக்கு எடுப்பது என்பது அவர்களால் முடியாத காரியம் என தெரிவிக்கின்றார்.
நாங்கள் எங்கள் மேலதிகாரிகளை ஏமாற்ற விரும்பவில்லை எங்களிற்கு வேறு வழியி;ல்லை என்கின்றனர் தொழிலாளர்கள்.இந்த தொழிலாளர்கள் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் தாங்கள் தொழில்புரியும் தொழிற்சாலைகளிற்கு அருகிலேயே தங்கியிருப்பவர்கள்.
தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்குமான செலவுகளை குறைப்பதற்கான வழிவகைகளை தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கின்றன என தெரிவிக்கின்றது தபிந்து கலக்டிவ்.
Average Rating