கருகரு கூந்தலுக்கு கற்றாழை ஜெல்!! (மகளிர் பக்கம்)
உலகம் முழுவதும் கற்றாழை பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கற்றாழை ஜெல் என்பது நமது முகத்தை பொலிவுடன் பளபளக்க செய்வது மட்டுமின்றி நமது தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் இந்த கற்றாழைக்கு உள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூந்தலையும் பெறலாம். நேச்சுரல் கண்டிஷனர்: கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது. ரசாயனம் கலந்த செயற்கை ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான முறைக்கு மாறினால் கூந்தலுக்கு மட்டுமின்றி உடலும் நலம் பெறும்.
கூந்தலுக்கு ஊட்டச்சத்து: தொடர்ந்து கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் கூந்தல் பாதுகாக்கப்படுகின்றது.ஈரப்பதம் : கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கற்றாைழயில் இருந்து கிடைப்பதால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. சரியான பிஎச் அளவு கூந்தலுக்கு கிடைப்பதோடு, நீளமான கூந்தலை பெறலாம்.கூந்தல் வெடிப்பு: காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடைவதோடு, கூந்தலின் முனை வெடித்து விடுகின்றது. ஆனால் தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வரும்போது மாசுவில் இருந்துபாதுகாப்பதோடு கேசம் உடைவதையும் தடுக்கின்றது.
நோய் கிருமி தாக்குவதை தடுக்கும்: தற்போது நவீனம் என்ற பெயரில் கூந்தலை வெவ்வேறு வண்ணங்களில் கலரிங் செய்து கொள்கிறோம். இதனால் தலையை ரசாயனம் மற்றும் நோய்கிருமிகள் தாக்குகின்றன. ஆனால் கற்றாழை ஜெல்லை கூந்தலின் வேர்க்கால்களில் தடவி வந்தால் நோய் கிருமி தாக்குதலில் இருந்து கூந்தலை தப்புவிக்கலாம். பொடுகு: வறண்ட சருமம், பூஞ்சை தொற்று, அரிப்பு, எண்ணெய் சருமம் உள்ளிட்டவற்றுக்கு கற்றாழை ஜெல் நல்ல மருந்தாக பயன்படுகின்றது. பொடுகு மற்றும் அரிப்பில் இருந்து காக்கும் கவசதொப்பியாக இந்த ஜெல் உள்ளது. முடி உதிர்வு: கற்றாழை ஜெல் முடி உதிர்வை தடுத்து கூந்தலை வலுவுடையதாக்குகின்றது. பொடுகு, மாசு உள்ளிட்டவற்றில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படுவதால் முடி உதிர்வு என்ற விஷயத்திற்கே இடமின்றி போகின்றது.
* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து தலைக்கு தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* கற்றாழை ஜெல்லை மட்டும் ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் மயிர்கால்கள் வலிமையடையும்.
* கற்றாழையை தொடர்ந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளக்கும்.
Average Rating