ஜோ பைடனிற்கு சென்னையுடன் உள்ள தொடர்பு என்ன? உலகின் கவனத்தை கவர்ந்துள்ள கட்டுரை!! (கட்டுரை)
அமெரிக்க தேர்தலிற்கு முன்னர் ஜோ பைடனிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிவித்த கட்டுரையொன்று மீண்டும் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
டிம்விலாசோ-வில்சே
ஜோ பைடனிற்கு இந்தியாவுடன் பூர்வீகத்தொடர்பொன்றுள்ளது.கமலா ஹாரிசிற்கு உள்ளதை போல.
இருவரினதும் பூர்வீகதொடர்புகள் சென்னையில் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னைய மெட்ராஸில்.
19ம் நூற்றாண்டின் போது வில்லியம் பைடன் கிறிஸ்டொபர் பைடன் சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பனிக்காக பணியாற்றியிருந்தனர்.இந்தியாவிற்கும் லண்டனிற்கும் இடையிலான கடினமான கடற்பயணத்தினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
வில்லியம் சிறுவயதிலேயே மரணித்த போதிலும்,கிறிஸ்டபர் பல கப்பல்களின் தலைமை மாலுமியாக பணியாற்றிய பின்னர் அவ்வேளை செல்வச்செழிப்பு மிக்கதாக காணப்பட்ட மெட்ராஸில் நிரந்தரமாக தங்கினார்.
சென்னை கடற்கரைகளில் தனது பேரனார் பிவிகோபாலனுடன் உரையாடிக்கொண்டு நடந்த நாட்களில் குறித்து கமலா ஹாரிஸ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டிருந்தார்.
தற்போது ஜோ பைடனுக்கும் இரண்டுநூற்றாண்டுகளுக்கு முன்னர் அதே நீளமான மணலில் உலாவந்த மூதாதையர்கள் உள்ளனர் போல தோன்றுகின்றது.
2013 இல் ஜோபைடன் தனக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து தெரிவித்திருந்தார்.
இரண்டு வருடங்களிற்கு பின்னர் தான் கிழக்கிந்திய கம்பனியில் கப்டனாக விளங்கிய ஜோர்ஜ் பைடனின் வம்சாவளியை சேர்ந்தவர் என குறிப்பிட்டிருந்தார்.
ஜோர்ஜ் பைடன் ஓய்வின் பின்னர் இந்தியாவிலேயே தங்கியிருக்க தீர்மானித்ததுடன் இந்திய பெண்ணை மணம்முடித்தார்.
இந்தியாவில் ஜோர்ஜ்பைடன் குறித்த ஆவணங்கள் விபரங்கள் எதுவுமில்லை.எனினும் கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதங்களுடன் காணப்பட்ட கப்பல்களின் கப்டன்களாக விளங்கிய இரு பைடன்கள் குறித்த குறிப்புகள் உள்ளன.
அவர்கள் இருவரும் சகோதரர்கள்- அவர்கள் கேப் ஒவ் குட்கோப் வழியாக தமது பதின்ம வயதில் லண்டனிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மிகவும் கடினமான கடற்பயணத்தை ஆரம்பித்தனர்.
அது மிகவும் சங்கடமான ஆபத்தான வேலையாக காணப்பட்டபோதிலும் நிதி நெருக்கடிக்குள்ளாகியிருந்த குடும்பத்தை சேர்ந்த புதல்வர்களுக்கு முன்னேற்றத்தின் எதிர்பார்ப்பு காரணமாக அது கவர்ச்சிகரமான தொழிலாக காணப்பட்டது.
கிறிஸ்டொபர் பைடன் தனது உறவினரான பெண்ணொருவரை 1819 இல் திருமணம் செய்துகொண்டார்- ஒரு ஆண் இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தையானார்.
தனது 42 வயதில் சிட்டங்கொங்கில் உருவாக்கப்பட்ட 712 தொன் கப்பலை கொள்வனவு செய்து கொழும்பிற்கும் மும்பாய்க்கும் இடையில் 1832 1834 இல் இரு தடவைகள் பயணம் செய்தார்.
அவர் 1839 இல் மார்குயிஸ் கார்ம்டென் என்ற கப்பலில் தனது குடும்பத்தவர்களுடன் இந்தியாவிற்கு பயணமானார்.
மெட்ராஸில் அவர் கடல்பயணங்களுக்கு பொறுப்பான பதவிகளில் பணிபுரிந்தார்.
இந்தியாவிற்கான அவரது பயணத்தின் போது நடுக்கடலில் அவரது மகள் உயிரிழந்தார்.
மெட்ராஸில் 19வருடங்கள் தங்கியிருந்த காலப்பகுதியில் அவர் அக்கறை மிகுந்த செயற்பாடுகளுக்காக பெயர் பெற்றார்.கடல்சார்ந்த பேரழிவுகளை தடுப்பதற்காக கடற்கரையில் விளக்குகளை அமைக்கும் அவரது நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்தியர்கள் உட்பட அனைத்து நாடுகளையும் சேர்ந்த மாலுமிகளின் விதவைகள் மற்றும் அனாதைகளிற்கான நன்கொடை அமைப்புகளில் அவர் அதிக ஆர்வத்தை காட்டினார்.
அவரது மகன் கொராடியோ 1846 இல் மெட்ராஸ் சென்றார்.
அவர் பின்னர் மெட்ராஸ் ஆட்டிலறியில் பணியாற்றினார்.
1858 இல் கிறிஸ்டோபர் மெட்ராஸில் காலமானார்.
அவரது இந்திய மனைவி குறித்து எங்கும் குறிப்பிடவில்லை, ஜோ பைடன் இந்தியாவுடன் தனக்கு தொடர்புள்ளது என்று தெரிவிப்பது உண்மையென்றால் அது கிறிஸ்டொபர் பைடனாகத்தானிருக்கவேண்டும்.
Average Rating