பொடுகை போக்கும் முல்லை!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பொடுகை போக்க கூடியதும், காய்ச்சலுக்கு மருந்தாக விளங்குவதும், வயிறு மற்றும் வாய் புண்களை குணமாக்கவல்லதும், பாதவெடிப்பு, சேற்று புண்களை சரிசெய்யும் தன்மை உடையதுமான முல்லையின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு நன்மைகளை உடைய முல்லை, மல்லிகை இனத்தை சேர்ந்தது. நல்ல மணத்தை தரக்கூடியது. தூக்கத்தை தூண்ட கூடியதாகிறது. வலி நிவாரணியாக விளங்குகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் அற்புத மருந்தாகிறது.
முல்லை செடியின் இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: முல்லை இலை, சீரகம், பனங்கற்கண்டு.செய்முறை: முல்லை இலை சுமார் 15 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல் சரியாகிறது. வயிறு மற்றும் வாய் புண்களை குணப்படுத்துகிறது. வயிறு வலியை போக்குகிறது. வாயுவை வெளியேற்றுகிறது.
முல்லை பூக்களை கொண்டு பொடுகை சரிசெய்யும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முல்லைப்பூ, தேங்காய் எண்ணெய். செய்முறை: முல்லை பூக்களை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். மணமுள்ள தைலமான இதை வடிகட்டி தலைக்கு தடவிவர பொடுகு இல்லாமல் போகும். தலையில் ஏற்படும் அரிப்பு, முடி உதிர்வு போன்றவை மாறும். முடியில் ஏற்படும் தொற்றுகள் சரியாகும்.
முல்லை இலையை பயன்படுத்தி படர்தாமரை, பாதவெடிப்பு, சேற்று புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முல்லை இலை, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் முல்லை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். பின்னர் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு பூசிவர படர்தாமரை, பாதவெடிப்பு, சேற்றுப்புண்கள், சொரி, சிரங்கு குணமாகும். தோல் நோய்களை இல்லாமல் செய்யும்.
தொப்பையை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை வெங்காயம், நல்லெண்ணெய். தொப்பை பிரச்னைக்கு வெள்ளை வெங்காயம் அற்புதமான மருந்தாகிறது. காரச்சுவை, அதிக நீர்ச்சத்து உடைய வெள்ளை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக்கி நல்லெண்ணெயில் வதக்கி, சூடாக சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர நாளடைவில் தொப்பை குறையும். வாயு விலகிப்போகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating