மூலநோய்க்கு மருந்தாகும் துத்தி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 40 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆசனவாய் கடுப்பை போக்க கூடியதும், மூலநோயால் ஏற்படும் பிரச்னைகளை குணப்படுத்தும் தன்மை உடையதுமான துத்தி செடியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

சாலையோரங்களில் காணப்படும் செடி துத்தி. இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். பால்வினை நோய்களை குணப்படுத்தும் மருந்தாக துத்தி விளங்குகிறது. மூலநோய், ஆசன வெடிப்பை குணப்படுத்தும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ரத்தக்கசிவை சரிசெய்யும். ரத்தத்தை உறைய வைக்கும். துத்தி செடியின் இலை, காய், பூக்கள் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது.
துத்தி இலைகளை பயன்படுத்தி மூலநோய்க்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துத்தி இலை, மோர். துத்தி இலைகளின் காம்புகளை நீக்கிவிட்டு பசையாக அரைத்து எடுக்கவும். ஒரு டம்ளர் மோரில், அரை ஸ்பூன் துத்தி இலை பசை சேர்த்து கலந்து, 3 முதல் 5 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மூலத்தினால் உண்டாகும் ஆசன கடுப்பு, ரத்தப்போக்கு கட்டுப்படும்.

துத்தி இலைகளை பயன்படுத்தி மூலநோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துத்தி இலை, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் துத்தி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த தைலத்தை மேல்பூச்சாக பயன்படுத்திவர மூலத்தினால் ஏற்படும் வீக்கம், வலி குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணத்தின் பாதிப்பால் மூலநோய் ஏற்படுகிறது. மூலம் அதிகரிக்கும்போது ஆசனவாயில் ரத்தப்போக்கு, புண், வெடிப்பு, கொப்புளங்கள் போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு துத்தி அற்புதமான மருந்தாகிறது. மூலத்தால் ஏற்படும் புண்கள் ஆறும். மூலநோயினால் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.

துத்தி பூக்களை பயன்படுத்தி ஆண்களுக்கான உயிரணு குறைபாட்டை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துத்தி பூக்கள், பால், பனங்கற்கண்டு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் எடுக்கவும். இதனுடன் துத்தி பூக்களை சேர்த்து வதக்கவும். பின்னர், பால் விட்டு வேக வைக்கவும். பனங்கற்கண்டுவை நீர்விட்டு கரைத்து இதில் சேர்த்து கலக்கவும். இதை குடித்துவர ஆண்களுக்கு உயிரணு குறைபாடு நீங்கும். உயிரணுவில் பயணத்தன்ைம அதிகரிக்கும். ஆண் மலட்டுத் தன்மைக்கு உயிரணு குறைபாடு காரணமாக அமைகிறது. இப்பிரச்னையை இந்த மருந்து சரிசெய்கிறது.

ஆறாத, சீல் பிடித்த புண்களுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு வேப்பிலை, புளியன் இலை மருந்தாகிறது. வேப்பிலை, புளியன் இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நீரில் காய்ச்சி ஆறவைத்து புண்களை கழுவிவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள், சர்க்கரை நோயினால் ஏற்பட்ட புண்கள், தொழுநோயால் ஏற்பட்ட புண்கள் ஆறிப்போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்மை எழுதும் கண்மை நிறமே!! (மகளிர் பக்கம்)
Next post உடலுக்கு பலம் தரும் தினை!! (மருத்துவம்)