தனக்கென்று தனியிடமான முதலிடத்தில் உள்ள “அதிரடி” இணையதளத்திற்கு நிதர்சனத்தின் வாழ்த்துக்கள்…

Read Time:2 Minute, 34 Second

ATHIRADY.Wish-Nitharsanam.gifANI.Hammer.gif பக்கசார்பற்ற நிலையில் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொணரும் அதிரடியின் இரண்டாவது ஆண்டு நிறைவை நிதர்சனம்.நெற் இணையம் வாழ்த்தி வரவேற்கின்றது. அத்துடன் நடுநிலையுடன் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொண்டு செய்திகளை வெளியிடுவதால் தான் அதிரடி இணையத்தளம் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கின்றதென்பதை நிதர்சனம்.நெற் இணையம் வாழ்த்துக்களுடன் தெரிவித்துக் கொள்கின்றது.

நிதர்சனம்.நெற் இணையத்தளத்தைச் சேர்ந்த எம்மில் சிலருக்கும் அதிரடியின் நிர்வாகக்குழுவில் உள்ள சிலருக்கும் தனிப்பட்ட ரீதியில் உள்ள தொடர்புகளின் மூலம் “மாற்றுக் கருத்துக் கொண்டவர்களால் நடாத்தப்படும் இணையத்தளங்களிலேயே (அதாவது புலிகளினாலோ அன்றில் புலிப்பினாமிகளினாலோ நடாத்தப்படும் இணையத்தளங்களைத் தவிர்த்து ஏனைய இணையத்தளங்களிலேயே) அதிரடி இணையத்தைப் பார்வையிடும் மக்கள் தொகையே அதிகம் என்பதுடன் அதிரடியே முதலிடத்தில் உள்ளது” என்பதையும் நாமறிவோம். சகஊடவியலாளர்கள் என்ற ரீதியில் இதுகுறித்து நாம் பெருமிதம் அடைகின்றோம்.

அத்துடன் அதிரடி இணையம் தமக்குக் கிடைக்கும் முக்கியமான செய்திகளை ஏனைய இணையங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் எமது நன்றி.

்அதிரடியின் வெற்றிக்குக் காரணம் செய்திகளில் சம்பந்தப்பட்டவர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொண்டு உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டு வரும் தன்மை, நடுநிலைமை தவறாமை போன்றவையே அதிரடியின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் மிகையில்லை.
உண்மைகளை எமது உறவுகளுக்கு எடுத்துச்செல்லும் உந்தன்பணி தொடர வேண்டுமென வாழ்த்துக்கள் கூறுகின்றோம். நன்றி

—-ஆசிரியர்பீடம், நிதர்சனம்.நெற் —- 12.10.06

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
Next post அமெரிக்காவின் தடபுடலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்: வடகொரியா அறிவிப்பு