உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 49 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் குடைமிளகாயின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட குடைமிளகாய் காரம், மணத்தை கொண்டது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புறவூதா கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது.

குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: குடைமிளகாய், பூண்டு, சோம்பு, உப்பு, மிளகுப்பொடி. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விடவும். இதில், 2 பல் பூண்டு தட்டிபோடவும். 2 ஸ்பூன் குடைமிளகாய் துண்டுகள் மற்றும் சோம்பு, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடித்துவர வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் சரியாகும். குடைமிளகாய் செரிமானத்தை சீர்செய்ய கூடியதாக விளங்குகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் உணவாகிறது. ரத்தநாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து இதய ஓட்டத்தை சீராக்கும்.

குடை மிளகாயை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: குடைமிளகாய், தக்காளி, உப்பு, மிளகுப்பொடி. ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். இதனுடன் குடைமிளகாய் துண்டுகள், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுப்பொடி சேர்க்கவும். இதை சாப்பிட்டுவர வைட்டமின் ஏ, பி, டி, சி, கே மற்றும் இரும்பு சத்துக்கள் நமக்கு கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மலச்சிக்கலை போக்கி செரிமானத்தை சீர்செய்கிறது. நச்சுக்களை வெளியேற்றும். உடல் எடை குறையும். 3 வண்ணங்களில் கிடைக்கும் குடை மிளகாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் சத்தூட்டமான உணவாகிறது.

குடைமிளகாயை பயன்படுத்தி உள்ளங்காலில் ஏற்படும் வலி, மரத்துப்போதல் பிரச்னைக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: குடைமிளகாய், கடுகு எண்ணெய், பூண்டு. ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய் எடுக்கவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, குடைமிளகாய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர பாதத்தில் ஏற்படும் வலி, மரத்துப்போதல், எரிச்சல் பிரச்னைகள் சரியாகிறது. குடைமிளகாய் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றுக்கு மருந்தாகிறது. வலியை போக்கும் இதை உணவில் சேர்த்துகொள்வதால் பல நோய்கள் நம்மை நெருங்காது. உடலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், சிவப்பு தன்மையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைகளுக்கு சந்தனம், வெண்ணெய் ஆகியவை மருந்தாகிறது. வெண்ணெய் உடன் சம அளவு சந்தன விழுது சேர்த்து கலந்து தோலின் மீது பூசிவர அரிப்பு, எரிச்சல், தடிப்பு, சிவப்புதன்மை குணமாகி தோல் இயல்பான நிலைக்கு திரும்பும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காய்ச்சலை தணிக்கும் மூங்கில் செடி!! (மருத்துவம்)
Next post ஆம்பளையா நீங்க?? ஆமா பயமா இல்ல வெட்கம்.. வெட்கம்மா நல்ல இருக்கு கிட்ட வா!! (வீடியோ)