காய்ச்சலை தணிக்கும் மூங்கில் செடி!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் வலியை போக்கவல்லதும், காய்ச்சலை தணிக்க கூடியதும், தோல்நோய்களுக்கு மருந்தாகி பயன்தருவதுமான பாம்போ ஆர்ச்சிட் எனப்படும் மூங்கில் செடியின் நன்மைகளை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
சாலையோரங்களில் இருக்க கூடியது மூங்கில் செடி. இதன் பூவானது கனகாம்பரம் போன்று இருக்கும். எள்ளு செடியின் காய்களை போன்று காணப்படும். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூங்கில் செடி, மே முதல் செப்டம்பர் வரை பூக்கும். இதன் காய், வேர், இலைகள் மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஈரலுக்கு பலம் தருவதாக அமைகிறது. காய்ச்சலை தணிக்கிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது. பாம்புக்கடிக்கு மேல் மருந்தாகிறது. தேனீர் தயாரிக்கலாம் பல்வேறு நன்மைகளை கொண்ட மூங்கில் செடியின் பாகங்களை பயன்படுத்தி உடல் வலி, காய்ச்சலை குணப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மூங்கில் செடி, மிளகு, சீரகம், இஞ்சி. செய்முறை: மூங்கில் செடியின் இலை, பூ, காய், வேர் ஆகியவை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி, சீரக பொடி, இஞ்சி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி சரியாகும். பக்கவாதம், முகவாதம் குணமாகும். விஷ காய்ச்சல் விலகி போகும். நிவாரணி தைலம் மூங்கில் செடியை பயன்படுத்தி வலி நிவாரணி தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மூங்கில் செடி இலை, நல்லெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதில், நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் மூங்கில் செடி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து எடுத்து வைத்துக் கொண்டு மேல்பூச்சாக போடும்போது தோல்நோய்கள் குணமாகும்.
மூட்டுவலி விலகிபோகும். காது வலி வரும்போது ஓரிரு சொட்டுக்கள் விடுவதால் வலி இல்லாமல் போகும். மூங்கில் செடியை பயன்படுத்தி வயிற்றுபோக்கு, கண்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். இதில் மூங்கில் செடியை 10 நிமிடம் முக்கிவைத்தால் கொளகொளப்பு தன்மை ஏற்படும். இந்த தண்ணீரை குடித்துவர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு சரியாகும். இந்த தண்ணீரை கொண்டு கண்களை சுத்தம் செய்யும்போது கண்நோய்கள் குணமாகும். வயிற்றுபோக்கு, சீதக்கழிச்சல் பிரச்னைகள் இருக்கும்போது இதை எடுத்துக் கொள்ளலாம். சாலையோரம், தோட்டங்களில் வளரும் இந்த மூங்கில் செடியை பயன்படுத்தி பயன்பெறலாம். கணுக்காலில் ஏற்படும் வீக்கத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு தொட்டாச்சுருங்கி மருந்தாகி பயன்தருகிறது. தொட்டாச்சுருங்கியின் பசுமையான இலைகளை தேனீராக்கி கழுவிவர வெகு சீக்கிரத்தில் கணுக்கால் வீக்கம் சரியாகும்.
Average Rating