எலும்புருக்கி நோய்க்கு மருந்தாகும் சித்தாமுட்டி!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 51 Second

நலம் தரும் நாட்டு மருத்துவம் பகுதியில் மிகவும் பயனுள்ள, செலவும் பக்கவிளைவுகளும் இல்லாத மருத்துவ முறையை அறிந்து பயன்பெற்று வருகிறோம். இதன் தொடர்ச்சியாக இன்று சித்தாமுட்டி தாவரத்தின் பயன்கள் மற்றும் மருத்துவம் குறித்து அறிந்து கொள்வோம். சித்தாமுட்டி என்ற இந்த தாவரம் அங்கிங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் குறிப்பாக சாலை ஓரங்களிலும் கூட எளிதாக கிடைக்கக்கூடியது. இதற்கு அபரிமிதமான மருத்துவ குணங்கள் உண்டு. இந்த தாவரத்தை சிட்ராமுட்டி என்றும் அழைப்பதுண்டு.

இந்த தாவரத்தை பயன்படுத்தி எலும்புருக்கி நோய்க்கு மட்டும் இன்றி வீக்கம், வலி, சீதபேதி, கழிச்சல், ரத்தக்கசிவு, வயிற்றுக்கோளாறுகள், குடல்சம்பந்தமான நோய்கள், மூட்டுவலி, இடுப்புவலி, கை, கால் குடைச்சல், முகவாதம், பக்கவாதம், முடக்குவாதம், இப்படி ஏனைய பல நோய்களுக்கும் தீர்வு காண முடியும். சித்தாமுட்டியை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவத்தால் உடல் வெப்பம் தணியும், கண்கள் குளிர்ச்சி பெற்று பார்வை தீர்க்கமாகும். செரிமானத்தை துாண்டுகிறது. இதனை உள்ளுக்கும் எடுத்து கொள்ளலாம். மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

சித்தாமுட்டியை பயன்படுத்தி குடல்சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தேனீர் தயாரிக்கலாம். இதை அருந்துவதால் பெருங்குடல் பலப்படும். செரிமானம் சீராகும். இதற்கு தேவையான பொருட்கள்: சித்தாமுட்டி இலைகள், சுக்குபொடி, கடுக்காய்பொடி, நெல்லி வற்றல். தேவையான அளவு தண்ணீர். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது அதில் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சித்தாமுட்டி இலைகள் ஒரு கைப்பிடி அளவு போட்டு அதனுடன் சுக்கு மற்றும் கடுக்காய் பொடி அரை தேக்கரண்டி மற்றும் நெல்லி வற்றல் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் இந்த தேனீரை வடிகட்டி அன்றாடம் குடித்து வர மேற்சொன்ன நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமையும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.

இனி சித்தாமுட்டி வேர் பயன்படுத்தி வாதம், மூட்டு வலி மற்றும் குடைச்சலுக்கு மருந்து தயாரிக்கும் முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சித்தாமுட்டி வேர், பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு எடுத்து பொடி செய்த திரிகடுக சூரணப்பொடி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது அதில் சித்தா முட்டி வேர் ஒரு கைப்பிடி அளவு போட்டு அதனுடன் பெருங்காயம், திரிகடுக சூரணம் அரை டீஸ்பூன் போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி ஆற வைத்து காலை மற்றும் மாலை என இருவேளை பருகிவர மேற்சொன்ன பிரச்னைகள் தீரும். பக்கவாதம், மூட்டுவலி, முக வாதம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது இந்த தேனீர்.

அடுத்து வீக்கம் மற்றும் கட்டிகளுக்கு சித்தாமுட்டி ேவர் பயன்படுத்தி மேல்பூச்சு தைலமருந்து தயாரிக்கும் முறை. இதற்கு தேவையான பொருட்கள்: சித்தாமுட்டிவேர்(சுத்தம் செய்து கழுவி காயவைத்து ஈரமில்லாமல் எடுத்து நறுக்கி பயன்படுத்த வேண்டும்), விளக்கெண்ணை, பூண்டு பற்கள் சிறிது, பெருங்காயம். செய்முறை:சித்தாமுட்டி வேர் மற்றும் 4 அல்லது 5 பூண்டு பற்கள் எடுத்து வேருடன் போட்டு நன்கு நசுக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணை ஊற்றி சூடானதும் வேர் மற்றும் பூண்டுக்கலவையை சேர்த்து அதில் பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்.

தைலப்பதம் வரும் போது அடுப்பை அணைத்து ஆறவைத்து கட்டி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் தொடர்ந்து மேல்பூச்சாக தடவி வர விரைவில் குணமாகும். இனி ரத்த மூலத்துக்கு எளிய மருந்து மற்றும் தீர்வு. கருப்பு எள் எடுத்து வறுத்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து இதனை பசு வெண்ணெயுடன் கலந்து ஓரிரு வேளை அன்றாடம் சாப்பிட்டு வர ரத்த மூலப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனிக்காலத்திலும் பளபளன்னு இருக்கணுமா? (மகளிர் பக்கம்)
Next post தூக்கமின்மைக்கு தீர்வாகும் ஸர்ப்பகந்தா!! (மருத்துவம்)