தலைபாரத்தை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 54 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைநீரேற்றத்தினால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும் மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். வில்வம், தும்பை, கற்பூரவல்லி ஆகியவை தலைபாரத்தை போக்கும் மூலிகைகளாக விளங்குகின்றன. தலைநீரேற்றம் காரணமாக மூக்கடைப்பு, தும்மல், தலைவலி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.

மூக்கில் அடிக்கடி நீர் வடியும். அற்புத மருத்துவ குணங்களை கொண்ட கற்பூரவல்லியை பயன்படுத்தி தலைபாரத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி இலைகள், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றவும். கற்பூரவல்லி இலைகளை நீக்கிவிட்டு, தண்டுகளை எடுத்து துண்டுகளாக்கி நசுக்கி இதில் போடவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்க்கவும். உணவுக்கு முன்பு ஒருவேளை இந்த தேனீரை குடித்துவர நீர்க்கோவை, தலைபாரம் சரியாகும். வில்வ இலைகளை பயன்படுத்தி தலைநீரேற்றத்தை சரிசெய்யும் தேனீர் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வில்வ இலைகள், சீரகம், தேன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விட்டு சீரகம் சேர்க்கவும். இதனுடன், வில்வ இலையை நீர்விடாமல் அரைத்து அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர தலைபாரம் இல்லாமல் போகும். கோயில், சாலையோரங்களில் காணக்கூடிய மூலிகை வில்வம். இது பல்வேறு நன்மைகளை கொண்டது. ஒவ்வாமையை போக்க கூடிய மருந்தாகிறது. சர்க்கரை நோய், தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தலைபாரத்தை போக்குவதுடன், சளியை வெளியேற்றுகிறது. தும்பை பூவை பயன்படுத்தி தலைபாரத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: தும்பை பூ, நல்லெண்ணெய், சாம்பிராணி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் 2 சிட்டிகை சாம்பிராணி சேர்க்கவும். சாம்பிராணி பொறிந்ததும் தும்பை பூவை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை தலையில் தேய்த்து சிறிது நேரத்துக்கு பின் குளித்தால் தலைநீரேற்றம் இல்லாமல் போகும். அடிக்கடி குளிர்பானம் குடிப்பது, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது போன்ற காரணங்களால் தலையில் நீரேற்றம் அதிகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு தும்பை பூ தைலம் அற்புதமான மருந்தாகிறது.

உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கிறது. தலையில் உள்ள பொடுகை போக்க கூடிய நல்மருந்தாக விளங்குகிறது. எளிதில் கிடைக்கூடிய அற்புத மருத்துவ குணங்களை உடைய தும்பை, வில்வம், கற்பூரவல்லி ஆகியவற்றை பயன்படுத்திவர தலைநீரேற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வுகாண முடியும். குமட்டல், வாந்தியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை வெங்காயம், இஞ்சி, தேன். செய்முறை: கடைத் தெருவில் கிடைக்கும் வெள்ளை வெங்காயத்தில் இருந்து சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி சாறு, தேன் கலந்து சாப்பிடும்போது குமட்டல், வாந்தி இல்லாமல் போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரோஜா… ரோஜா…!! (மகளிர் பக்கம்)
Next post நலம் தரும் மருத்துவம்!! (மருத்துவம்)