டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 46 Second

ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதில்லை. அதுபோல சிறுவர், சிறுமியரும் ஓடி ஆடும் விளையாட்டில் கலந்துகொள்வதில்லை.

எந்நேரமும் உட்கார்ந்த இடத்திலே செல்போனில் கேம் விளையாடுகின்றனர். அதனால் உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றை தவிர்க்க டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்கிறார் ஜிம் சென்டர் மேலாளர் ராணி. அது குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டவை…

“முன்பெல்லாம் பிள்ளைகள் நன்கு ஓடி ஆடி விளையாடு வார்கள். ஆரோக்யமான உணவு, ஆரோக்யமான சூழ்நிலை, விளையாட்டு என அவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். நல்ல உடல்நிலை இருக்கும். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை. பெரும்பாலான வீட்டில் தனி ஒரு பிள்ளையாய் இருப்பதால் எகிறி குதித்தல், தொங்கி விளையாடுதல் என எதை செய்தாலும் ‘அப்படி செய்யாதே, இப்படி செய்யாதே விழுந்துடுவ, அடி பட்டுடும்’ என பெற்றோர்கள் குழந்தைகளை பயமுறுத்தியே வளர்க்கிறார்கள்.

அதனால் பெரிதாக விளையாட்டு என்பதே பிள்ளைகளிடம் அற்றுப்போய்விட்டது. பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பில் பிள்ளைகளை அடுத்தவருடன் பழக விடாமல் வீட்டிற்குள்அடைத்து விடுகிறார்கள். அடுக்கடுக்காய் பாடம், இந்த கோச்சிங், அந்த கோச்சிங் என பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய் உடற்பருமன், பெண் பிள்ளைகள் சிறுவயதில் பூப்பெய்துதல் போன்றவை ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து காணப்படுகிறது.

பள்ளியிலும் முன்பு பிள்ளை கள் விளையாட்டு வகுப்பில் நன்கு விளையாடுவார்கள். இப்போது சில பள்ளிகளில் அந்த விளையாட்டு நேரத்தையும் ஏதாவது பாட வகுப்பிற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிஸிகல் ஆக்டிவிட்டீஸ் குறையும் போது இளம் பிள்ளைகள் உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற பிரச்னைகள் அவர் களுக்கு ஏற்படுகிறது. இதனால் வளரும் போது அவர்களது குணத்திலும் மாறுபாடு தோன்றலாம்.

முறையான பயிற்சிகள் அற்றுப்போகும் போது வளரும் பிள்ளைகளுக்கு இன்ட்யூரன்ஸ் லெவல் குறையும். இன்ட்யூரன்ஸ் லெவல் என்பது தூரத்தில் நிற்கும் பேருந்தை பிடிக்க ஓடும் போது முறையான பயிற்சிகள் செய்யும் குழந்தையால் ஓடிப்போய் அந்த பேருந்தை பிடிக்க முடியும். அதுவே பயிற்சியற்ற குழந்தையிடம் இன்ட்யூரன்ஸ் லெவல் குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தையால் அந்த தூரத்திற்கு ஓட முடியாமல் போகலாம் அல்லது நினைத்த நேரத்திற்கு ஓடிச்சென்று அந்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகலாம். இன்ட்யூரன்ஸ் லெவலை அதிகரிக்க ஜிம் பயிற்சிகள் உதவும்.

அதுமட்டுமின்றி முன்னர் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளை பிள்ளைகள் உட்கொண்டனர். தற்போது ஃபாஸ்ட் ஃபுட் காலமாகிவிட்டதால் உணவிலும் அவர்களுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதில்லை. அதனால் பிள்ளைகள் பலவீனமாக இருக்கின்றனர். அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு ஜிம் ஒரு நல்ல வரம். ஜிம்முக்குச் சென்று தேவையான பயிற்சிகளை மேற்கொண்டால் பிள்ளைகள் பலம் பெறுவார்கள்.

குறிப்பாக பெண் பிள்ளைகள். இப்போது இருக்கிற சமூக சூழ்நிலையில் பெண் பிள்ளைகள் நல்ல உடல் பலத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம். அங்கே அவர்கள் வயதிற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும்.

பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றாற் போல் பயிற்சிகள், தொப்பை உடன் இருக்கும் பிள்ளைகளுக்கென்று வயிற்றுத் தசை பயிற்சிகள் என கற்றுத்தரப்படும். வளர்ச்சிக்காக ஸ்கிப்பிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகள், பொதுவாக பிள்ளைகளுக்கென்று உடலை வலுவாக்கும் பயிற்சிகள், த்ரெட் மில், சைக்கிளிங் போன்ற ப்ளோர் கார்டியோ ஒர்க் அவுட் போன்றவற்றை கற்றுக்கொடுப்போம்.

இதனால் அவர்களது எனர்ஜி லெவல் அதிகரிக்கும். அவர்கள் உடம்பின் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். ஃபிட்னஸ் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் ப்ளக்ஸிபிலிட்டி இருக்கும். சாதாரணமாகவே ஒரு நாள் முழுவதும் கையை அசைக்காமல் வைத்திருந்தால் மறுநாள் வேலை செய்யும்போது கடினமாக இருக்கும். அதனால் முறையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது உடம்பில் நல்ல வளைவுத்தன்மை இருக்கும்.

சில குழந்தைகளுக்கு பிறப்பிலே தசைகள் பலவீனமாக இருக்கும். அவர்களால் எடை அதிகமுள்ள பொருளை தூக்க முடியாது. நீண்ட தூரம் ஓட முடியாது. வயிற்றில் இருக்கும் போது தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளை
களும் தொடர் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தசைகள் நல்ல வலுப்பெறும். அதுமட்டுமன்றி சில ஜிம்மில் யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.

இவை உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் மனநலத்திற்கும் மிக நல்லது. சில வீடுகளில் நீச்சல் போன்ற பயிற்சிகள் கற்றுக்கொள்ள உத்வேகம் தருகிறார்கள். அது நல்லது. ஆனால் ஜிம்முக்குப் போவதை யாரும் என்கரேஜ் செய்வதில்லை. ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் செய்வதும் நல்லது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜிம்முக்கு செல்லும் பிள்ளைகளுக்கென்று ஸ்பெஷலாக டயட் லிஸ்ட் எல்லாம் கிடையாது. ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்த்து ஆரோக்ய உணவுகளை உட்கொண்டால் போதுமானது”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீதிபதிக்கே நீதி சொல்லி கொடுத்தது நம்ப கேப்டன் தாங்க மறக்காம பாருங்க!! (வீடியோ)
Next post இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)