சொரியாசிஸ் நோய்க்கு மருந்தாகும் மரிக்கொழுந்து!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 8 Second

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை சரிசெய்ய கூடியதும், சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதுமான மரிக்கொழுந்துவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். மணம் தரும் அற்புதமான மூலிகை மரிக்கொழுந்து. ஆரோக்கியத்தை தரும் இது, பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. நோய் கிருமிகளை தடுக்கிறது. வலியை போக்குகிறது, வீக்கத்தை வற்ற செய்கிறது. மன அழுத்தத்தை போக்கும் ஒன்றாக விளங்குகிறது.

மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, நல்லெண்ணெய், சுக்குப்பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி இளஞ்சூடாக தலையில் பற்றாக போட்டுவர தலைவலி சரியாகும். மூட்டுவலி இருக்கும்போது மேல்பற்றாக போடுவதால் நல்ல பலன் கிடைக்கும். வீக்கம் வற்றும். வலி விலகும்.மரிக்கொழுந்து மனதுக்கு இதம் தருகிறது. உறக்கத்தை வரவழைக்கிறது. விட்டுவிட்டு வரும் வலிகளை போக்கும்.

மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்று வலி, தோல்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.செய்முறை: மரிக்கொழுந்து இலை பசை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், 100 மில்லி நீர்விட்டு சுமார் அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது தெளிந்ததும் வடிகட்டி குடித்துவர வயிற்று வலி சரியாகும். தோல்நோய் பிரச்னைகள் இருப்பவர்கள் இதை தினமும் எடுத்துவர பூஞ்சை காளான்களால் ஏற்படும் தொற்று சரியாகும். சொரியாசிஸ் பிரச்னை குணமாகும். வயிற்று கடுப்பை போக்கும் ஒன்றாக விளங்குகிறது. சிறுநீர் கடுப்பையும் தணிக்கிறது. கதம்பத்தில் கட்டி தலைக்கு சூடும் ஒன்றாக விளங்கும் மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுக்கும்போது தூக்கத்தை தூண்டக்கூடியதாக விளங்குகிறது.

மரிக்கொழுந்தை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, தேங்காய் எண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுது சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்திவர தோல்நோய்கள் குணமாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை வலியையும் போக்க கூடிய தன்மை உடையது. சொரியாசிஸ் நோய்க்கு மருந்தாகிறது. அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. உள், வெளி மருந்தாகவும், விஷத்தை முறிக்க கூடியதாக மரிக்கொழுந்து விளங்குகிறது.மூச்சிரைப்பை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: துத்தி பூக்கள், பால். செய்முறை: சாலையோரங்களில் கிடைக்கும் துத்தி பூக்கள் சுமார் 15 எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து காய்ச்சி இனிப்பு கலந்து குடித்துவர ஆஸ்துமா என்கிற மூச்சுமுட்டுதல், மூச்சிரைப்பு நாளடைவில் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்!! (வீடியோ)
Next post வலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி!! (மகளிர் பக்கம்)