திரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 20 Second

பெண் இயக்கத்தில் வெளிவந்த முதல் இந்தியத் திரைப்படம் ‘Bulbul-e-Paristan’. இது 1926-ம் ஆண்டு வெளிவந்தது. இதன் இயக்குநர் ஃபாத்மா பேகம். இவருக்குப் பின்னால் காலத்தால் அழிக்க முடியாத பல பெண் இயக்குநர்கள் இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: சாவித்திரி, டி.பி.ராஜலட்சுமி, விஜயா மேத்தா, கல்பனா லட்சுமி, சாய் பரஞ்ச்பே, அருணா ராஜே, ப்ரேமா கரந்த், அபர்ணா சென், மீரா நாயர், தீபா மேத்தா, ஃபரா கான், கிரண் ராவ், அனுஷா ரிஷ்வி என்று இந்தப் பட்டியல் நீளும்.

இப்போது அகில இந்திய அளவில் ரிமா தாஸ், விது வின்சென்ட், நந்திதா தாஸ், அஞ்சலி மேனன், கெளரி ஷிண்டே, அலங்கிரிதா ஸ்ரீவத்சவா, மேக்னா குல்சார், அனன்யா கசரவல்லி, பிரதீமா ஜோஷி, ஷிடால் ஷா என இந்தியப் பெண் இயக்குநர்களின் படங்கள் சர்வதேச அளவில் பேசப்படுகிறது. இதோ அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்

1) ரிமா தாஸ்: இரு அசாமிய படங்களை இயக்கியுள்ளார். இவருக்குப் படங்களைத் தயாரிக்க அசாம் அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் இவரது ‘Village Rockstars’ படமே அனுப்பப்பட்டுள்ளது. இவரது இன்னொரு படமான ‘Bulbul Can Sing’ IIFF-ல் திரையிடப்பட்டு புகழப்பட்டுள்ளது. இயக்கம், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், புரொடக்‌ஷன் டிசைனர் என பன்முகங்களில் பவனி வருகிறார்.

2) விது வின்சென்ட் : கேரளாவைச் சேர்ந்த இவருடைய `Manhole’ படத்திற்கு 2016-ம் ஆண்டுக்கான கேரள அரசின் சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. ஒரு பெண் இயக்குநர் பெற்ற முதல் விருது இதுவே. தவிர, IFFK-ல் திரையிடப்பட்ட முதல் பெண் இயக்குநரின் படம் ‘Manhole’ தான்.

3) நந்திதா தாஸ்: 10 வருடங்களுக்கு முன் ‘Firaaq’ என்ற படத்தை இயக்கினார். இப்போது `Manto’ படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பேசப்படும் படமாக இது விமர்சனம் பெற்றுள்ளது.

4) அஞ்சலி மேனன்: வசூலில் சாதனை படைத்த `Bangalore days’ படத்தின் இயக்குநர் இவர்.

5) கெளரி ஷிண்டே: `English Vinglish’ படத்திற்குப் பிறகு `Dear Zindagi’ படத்தை இயக்கியவர். வித்தியாசமான பார்வை கொண்டவர்.

6) அலங்கிரிதா ஸ்ரீவத்சவா: `Lipstick Under My Burkha’ என்ற இவர் இயக்கிய படம், பெண்களின் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலித்த படம் என புகழப்பட்டுள்ளது. ‘‘பெரிய பட்ஜெட் படங்களை இயக்க தயாரிப்பாளர்கள் எங்களை அழைப்பதில்லை. இதனால் குறைந்த பட்ஜெட் செலவு படங்களை நாங்கள் இயக்க வேண்டியுள்ளது பலவீனம்தான்…’’ என்கிறார் அலங்கிரிதா!

7) மேக்னா குல்சார்: இவருடைய லேட்டஸ்ட் படமான ‘ராசி (Raazi)’யில் அலியாபட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாகிஸ்தானில் துணிச்சலாக உலாவும் உளவுப் பெண்ணாக அவர் நடித்துள்ளார்!‘‘பெண் என்ற லேபிளில், இடம் ஒதுக்கப்பட்டு பணிபுரிய விரும்பவில்லை! `Lamhe’ போன்ற பெண் சார்ந்த முற்போக்கான படத்தை ஆண்தான் இயக்கியுள்ளார். ஆக நான் பேசப்படக்கூடாது. மாறாக என் படம் பேசி என்னை வெளிப்படுத்த வேண்டும்…’’ என்கிறார் மேக்னா

8) அனன்யா கசரவல்லி: இவருடைய கன்னட படம் ‘Harikatha Prasanga’ பூசன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இவர் சென்னை எல்.வி.பிரசாத் ஃபிலிம் மற்றும் டீவி அகாடமியில் இயக்கம் சார்ந்து படித்தவர்.

9) பிரதீமா ஜோஷி: எழுத்தாளர் கெளரி தேஸ் பாண்டே எழுதிய மராத்தி கதைகளிலிருந்து `Aamhi Doghi’என்ற படத்தை இயக்கியுள்ளார். இது மூன்று கோடி ரூபாய் வருமானம் பெற்றுத்தந்தது.

10) ஷிடால் ஷா: இவரு டைய குஜராத்தி படமான ‘Hu Tu Tu Tu’ கமாடிட்டி மார்க்கெட் சார்ந்ததாகும். ஆனாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இவை உணர்த்துவது என்ன? பெண்கள் முயன்றால் எதிலும் சாதிக்கலாம். குறிப்பாக இயக்குநர் துறையில் கூடுதல் பெண்கள் வரவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
Next post இருமலை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)