இலங்கையில் ராணுவத்தினர் 75 பேர் சுட்டுக்கொலை: விடுதலைப்புலிகள்

Read Time:1 Minute, 23 Second

ltte-Sl.army-l.jpgஇலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சினாலி மற்றும் முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகள் ராணுவ முன்கள முகாமை சுற்றி வளைத்து தாக்கினார்கள். நேற்று முன்தினம் நடந்த இந்த சண்டையில் 75 வீரர்கள் பலியானார்கள் 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் 75 பேர் பிணத்தையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். இதில் 20 பிணங்களை கிளிநொச்சிக்கு கொண்டு வந்தனர். வீரர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அரசிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். சமந்தா வீரசிங்கா என்ற சிங்கள வீரரை உயிருடன் பிடித்தனர். விடுதலைப்புலிகள் தரப்பில் 11 பேர் பலியானார்கள். அரசு தரப்பில் இது பற்றி கூறும் போது 43 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேரை காணவில்லை. 224 பேர் காயம் அடைந்தனர் என்றும் ஆனால் தாங்கள் 200 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு ஆறரை லட்சம் இராக்கியர்கள் பலி”
Next post 52 மாடி கட்டடத்தில் விமானம் மோதி விபத்து