சமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்!! (மகளிர் பக்கம்)
அமெரிக்காவில் உள்ள பல பகுதிகளை எடுத்துக் காட்டும் அருங்காட்சியகங்கள் ஏராளமாய் உள்ளன. இப்படி மொத்தம் அமெரிக்கா முழுவதும் 5000 அருங்காட்சியகங்கள் உள்ளன.இவற்றை கவனித்த இந்தியாவின் மிகப் பிரபலமான சமையற்கலை நிபுணர் மற்றும் செஃப்பான விகாஸ் கன்னாவுக்கு இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்கள், வாழ்க்கை முறை, நடைமுறையை பிரதிபலிக்கும் சமையலறைகள் சார்ந்த உபகரணங்களை சேகரித்து, ஒரு அருங்காட்சியகம் அமைத்தால் என்ன என்று ஆசை எழுந்தது.
அதன் விளைவு தான் ‘வெல்கம் குரூப் கிராடுவேட் ஸ்கூல் ஆப் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்’ என்ற ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி வளாகத்தில் பெரிய பானை வடிவில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார் விகாஸ். இங்கு ஹரப்பா கால சமையல் பாத்திரங்களிலிருந்து இன்று வரை இந்தியா முழுவதும், பல மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ள உணவுகள் சார்ந்த உபகரணங்களை சேகரித்து வைக்கப்பட்டுள்ளதை காணலாம். இவை ஆயிரக்கணக்கில் கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து சேமித்துள்ளார் விகாஸ்.
போர்ச்சுகீசியர்கள் பயன்படுத்திய பல வண்ண தட்டுக்கள், அகப்பைகள், கொங்கன் உடுப்பி மற்றும் செட்டிநாடு பகுதிகளில் சமையலறை சார்ந்து பழக்கத்தில் உள்ள உபகரணங்கள், பாத்திரங்கள் என அனைத்தும் இங்கு அழகாக வரிசைப்படுத்தி வைத்து இருப்பதை நாம் பார்க்க முடியும்.
டீ கெட்டில்கள், கூஜாக்கள், இண்டிகள், முறங்கள், மர உரல்கள், செம்பு போன்ற உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட தாழிகள், சேவை பிழிய உதவும் கருவிகள், முறுக்கு பிழியும் கருவிகள், பழம் பிழிய உதவும் கருவி, ஊறுகாய் சேமிப்பு பாத்திரங்கள், மட்கலங்கள், செம்பு பானைகள், தண்ணீர் பிளாஸ்குகள், கலையம்சம் மிக்க ஸ்பூன்கள் மற்றும் பரிமாறும் ஸ்பூன்கள்…. என அனைத்தையும் கொச்சி, ஜம்மு, புனே, ஹைதராபாத் மற்றும் குஜராத் பகுதிகளில் இருந்து பார்த்து பார்த்து சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைத்துள்ளார்.
ஐஸ்கிரீம் தயாரிக்க ஆரம்ப காலங்களில் பயன்பட்ட மெஷின்கள், சப்பாத்தி, பூரி இட பயன்படும் பூரி கட்டை ஆகியவையும் இங்கு நாம் பார்க்கலாம். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க பயன்படுத்தப்பட்ட அகலபாத்திரம், எண்ணெய் தயாரிக்க பயன்படும் செக்கு, அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய டின்னர் மற்றும் சில்வர் செட் (துருக்கி நாட்டிலிருந்து வந்தவை) என பலவற்றை இங்கு காணலாம்.
ஒவ்வொரு பாத்திரங்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்த விளக்கங்களை அழகாக அந்தந்த பாத்திரங்களுக்கு கீழ் குறிப்பிட்டு இருப்பதால் எல்லாராலும் அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள வசதியாக உள்ளது. மேலும் தன் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை பற்றிய விரிவான விளக்கங்களை விகாஸ் ‘பத்ரா’ என்ற பெயரில் புத்தகமாக தொகுத்துள்ளார். குறிப்பிட்டு தயாரிக்கப்பட்டு, விகாஸ்
கன்னா; ‘பத்ரா’ என்ற பெயரில் புத்தகமாக தொகுத்துள்ளார்!
பிக்னிக் செல்லும் போது எடுத்துச் செல்லப்படும் செட்பாத்திரங்களும் இங்கு பார்வைக்கு உள்ளதாக தெரிவித்துள்ள விகாஸ், இந்த அருங்காட்சியகம் கண்டிப்பாக எல்லாருடைய மனதையும் கவரும் என்றார்.
Average Rating