`ரிமோட்’ பொம்மைகளுக்கு இலங்கையில் தடை

Read Time:1 Minute, 46 Second

Remote.toys.jpgஇலங்கையில் “ரிமோட்” பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போர், நார்வே நாட்டு தூதுக்குழு மேற்கொண்ட முயற்சி காரணமாக முடிவுக்கு வந்தது. இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.nகடந்த ஜுலை மாதம் முதல் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இருதரப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

ரிமோட் பொம்மைகளுக்கு தடை

சாலைகளில் வெடிகுண்டுகளை வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் “ரிமோட்” பொம்மைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கார், படகு, விமானம் போன்ற பொம்மைகளில் விடுதலைப்புலிகள் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்து விடலாம் என்ற அச்சம் காரணமாக “ரிமோட்” பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தடை குறித்து விடுதலைப்புலிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்ப்பாணத்தில் புலிகள் – ராணுவம் கடும் மோதல்!
Next post 2வது அணு குண்டை சோதித்ததா வ.கொரியா?