இன்று நிரந்தர கப்பல் சேவை ஆரம்பம்

Read Time:2 Minute, 27 Second

SL.KEHELIYA RAMBUKWELLA.2jpg.jpgதிருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான நிரந்தர பயணிகள் கப்பல் சேவையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.. யாழ்ப்பாண- கண்டி ஏ-09 பாதை ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதையடுத்து அதனைத் தீர்க்கும் வகையில் இந்தக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்பக்வெல்ல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நானு}று பேர் செல்லக்கூடிய இந்தக் கப்பல் முற்றிலும் பயணிகளின் போக்கு வரத்திற்காகப் பயன்படுத்தப்படுமென்று தெரிவித்த அமைச்சர், திருகோணமலையிலிருந்து இன்று ஒரு தொகை பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்படவளன்ளதாகவம் கூறினாh.

சாவதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் பொக்கவரத்திற்கு வழித்துணை வழங்க மறுத்தவிட்ட போதிலும் அந்தச் சவாலை ஏற்று, கடற்படையினரின் முயற்சியால் இதுவரை யாழ்ப்பாண குடாநாட்டுக்கு 25600 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புலிகளின் இணக்கம் இல்லாததால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியை கப்பலில் பறக்கவிடமுடியாதெனக் கூறிவிட்டார்கள். இது ஒருவகையில் புலிகளுக்கு முறைமுகமாக உதவும் செயற்பாடு என்று தான் கூறவேண்டும்.

இது இவ்விதமிருக்க திருகோணமலை கிண்ணியாவுக்கும் மூது}ருக்குமிடையிலான போக்குவரத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு
Next post யாழ்ப்பாணத்தில் புலிகள் – ராணுவம் கடும் மோதல்!